உயர்கல்வி துறையில் ஊழல் குறித்து புகார் அளிக்க இணையதளம்: அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

உயர்​கல்வி அமைச்சர் ​விஸ்வநாதன்

உயர்​கல்வி அமைச்சர் ​விஸ்வநாதன்

Updated on
1 min read

சென்னை: உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை உட்பட ஏராளமான கோரிக்கைகள் உள்ளன.

அவற்றை எல்லாம் விரைவில் சரிசெய்வோம். எங்களுக்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுகிறது. துணைவேந்தர், பதிவாளர், முதல்வர், ஆட்சிமன்றக் குழு அளவில் ஊழல்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுதவிர பணி நியமனத்திலும் ஊழல்கள் நடை பெறாது.

மேலும், உயர்கல்வித் துறையில் ஊழல் தொடர்பாக புகார் அளிக்க விரைவில் இணையதளம் அறிவிக்கப்பட உள்ளது. யாராவது லஞ்சம் கேட்டால் அதில் தெரிவிக்கலாம். அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

வெறும் பட்டப்படிப்பு வழங்கும் முறையை மாற்றி, வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியை வழங்க உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன. இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>உயர்​கல்வி அமைச்சர் ​விஸ்வநாதன்</p></div>
“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in