திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கான வசதிகளை கண்காணிக்க உயர்மட்டக்குழு அமைத்து உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
2 min read

சென்னை: திரு​வண்​ணா​மலை அருணா​சலேஸ்வரர் கோயில் தீபத்​திரு​விழாவை காணவரும் பக்​தர்​களுக்​கான வசதி​களை கண்​காணித்து அறிக்கை தாக்​கல் செய்ய ஓய்வு​பெற்ற பஞ்​சாப் - ஹரியானா உயர் நீதி​மன்ற நீதிபதி கண்​ணன் தலை​மையில் உயர்​மட்​டக்​குழு அமைத்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திரு​வண்​ணா​மலை அருணா​சலேஸ்வரர் கோயில் வளாகத்​தில் உள்ள அம்​மணி அம்​மான் மண்​டபத்​தில் உள்ள இடத்தை சட்​ட​விரோத​மாக ஆக்​கிரமித்​திருந்​த​தாக டி.எஸ். சங்​கர் என்​பவரை அந்த இடத்​தி​லிருந்து அப்​புறப்​படுத்த அறநிலை​யத்​துறை ஆணை​யர் உத்​தர​விட்​டிருந்​தார்.

அந்த உத்​தரவை எதிர்த்து சங்​கர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். மேலும் கோயில் அறங்​காவலர் குழு தலை​வ​ராக இருந்த ஜீவானந்​தம் என்​பவர் காலசாந்தி அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான இடத்தை தனக்கு உள்​வாடகைக்கு விட்​ட​தாகவும், எனவே அவரை அறங்​காவலர் குழுத் தலை​வர் பத​வி​யில் இருந்து தகுதி நீக்​கம் செய்ய வேண்டு​மென்​றும் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த தனி நீதிபதி, சங்​கரை அந்த இடத்​தில் இருந்து அப்​புறப்​படுத்த அறநிலை​யத்​துறை ஆணை​யர் பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்து உத்​தர​விட்​டார். அதேபோல அறங்​காவலர் குழுத் தலை​வர் பத​வி​யில் இருந்து ஜீவானந்​தத்தை தகுதி நீக்​கம் செய்​தும் உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவு​களை எதிர்த்து அறநிலை​யத்​துறை மற்​றும் ஜீவானந்​தம் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப்​பட்​டது.

இந்த மேல்​முறையீட்டு வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜி. ஜெயச்​சந்​திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து உத்​தர​விட்​டனர்.

மேலும், திரு​வண்​ணா​மலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் பக்​தர்​களின் வசதிக்​காக அம்​மணி அம்​மான் மண்​டபத்​தில் உள்ள சட்​ட​விரோத ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி சுற்​றுச்​சுவர் எழுப்ப வேண்​டும். மடத்​துக்​குள் அமைந்​துள்ள அம்​மணி அம்​மான் கோயிலை புதுப்​பிக்க வேண்​டும்.

அந்​தப்​பகுதி​யில் காலியாக உள்ள 25 ஆயிரம் சதுர அடி நிலத்​தில் பக்​தர்​களுக்​கான தங்​குமிட வளாகம் கட்ட வேண்​டும். இந்த கட்​டு​மானத்தை வரும் 2027 மார்ச் இறுதிக்​குள் தொடங்க வேண்​டும். புதிதாக கட்​டப்​படும் அந்த வளாகத்​துக்கு அம்​மணி அம்​மான் பெயரை சூட்ட வேண்​டும். நிரந்​தர கட்​டிடம் கட்​டும் வரை, அந்த இடத்​தில் தீபத்​திரு​விழாவுக்கு வரும் பக்​தர்​களின் வசதிக்​காக காத்​திருப்​புக்​கூடம், உணவுக்​கூடம், பொருட்​கள் வைக்​கும் அறைகள், கழிவறைகள் போன்​றவற்றை தற்​காலிக​மாக ஏற்​படுத்த போர்க்​கால அடிப்​படை​யில் நட​வடிக்கை எடுத்து வரும் நவ.10-க்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என கோயில் செயல் அலு​வலருக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தரவு​களை கோயில் நிர்​வாகம் முறை​யாக அமல்​படுத்தி தீபத்​திரு​விழாவை காணவரும் பக்​தர்​களுக்கு வசதி​களை செய்து கொடுக்​கிறதா என்​பதை கண்​காணித்து அறிக்கை தாக்​கல் செய்ய பஞ்​சாப் - ஹரியானா உயர் நீதி​மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்​ணன் தலை​மையில் அறநிலை​யத்​துறை ஓய்வு​பெற்ற இணை ஆணை​யர் எஸ்.ஜெயராமன் உள்​ளிட்​டோர் அடங்​கிய உயர்​மட்​டக் குழு​வையும் அமைத்து நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

இந்த உயர்​மட்​டக்​குழு திரு​வண்​ணா​மலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வாயி​லாக உயர் நீதி​மன்​றத்​துக்கு அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​வி்ட்டு, இந்​தக்​குழு​வுக்கு கோயில் நிர்​வாகமும், மாவட்ட நிர்​வாகமும் ஒத்​துழைப்பு வழங்க வேண்டு​மென்​றும் உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
நெருங்கும் ‘அர்னாப்’ புயல் - ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் அதிகனமழை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in