திருப்பரங்குன்றம் வழக்கில் மார்ச் 18-ல் குற்றச்சாட்டு பதிவு: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் வழக்கில் மார்ச் 18-ல் குற்றச்சாட்டு பதிவு: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
Updated on
1 min read

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் தீப விவகாரம் தொடர்பான நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் மார்ச் 18-ம் தேதி தகுந்த பதில் அளிக்​கா​விட்​டால் குற்​றச்​சாட்டு பதிவு செய்​யப்​படும் என காவல்​துறை அதி​காரி​களுக்கு உயர் நீதி​மன்​றம் எச்சரிக்கை விடுத்​துள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத​தால் மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணையர், காவல் இணை ஆணையர், கோயில் செயல் அலு​வலர் ஆகியோர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் மனுதாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது ஆஜரான மாவட்ட ஆட்சியர் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டதாகக் கூறி மன்னிப்பு கேட்பதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தொடர் விசாரணையில் நீதிமன்றம் பரிந்துரைக்கும் 5 பேரை பூஜை செய்யஅனுமதிப்பது குறித்து அறிக்கைதாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்துபல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் அவமதிப்பு மனுவை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் பிறப்​பித்த உத்​தர​வு: இந்த அவம​திப்பு வழக்​கில் திருப்​பரங்​குன்​றம் கோயில் அறங்​காவலர்​கள் சத்​யப்​ரி​யா, என்​.மணிசெல்​வன், டி.எம்.பொம்​மதேவன், வி.சண்​முகசுந்​தரம் மற்​றும் டி.​ராமையா ஆகியோரை சேர்க்​க​வும், மதுரை மாநகர காவல்​ ஆணை​யர் ஜெ.லோக​நாதன், காவல் துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன் ஆகியோர் மீது குற்​றச்​சாட்டு பதிவு செய்​ய​வும் நீதி​மன்​றம் நினைத்​தது.

அவர்​களின் வழக்​கறிஞர்​கள், தீபத்​தூண் அருகே 5 பேரை பூஜை செய்ய அனு​ம​திப்​பது என மார்ச் 2-ல் நீதி​மன்​றம் தெரி​வித்த பரிந்​துரையை பரிசீலித்து கவன​மாக முடி​வெடுக்க வேண்​டும், இந்து சமய அறநிலை​யத்​துறை​யுடன் கலந்​தாலோ​சித்து முடிவு எடுக்​கப்பட வேண்​டும். அதற்கு அவகாசம் வேண்​டும் என்​றனர்.

இந்​தக் கோரிக்​கையை ஏற்று விசா​ரணையை இன்​னும் 2 வாரங்​களுக்கு தள்​ளிவைக்​கிறேன். அன்று அறங்​காவலர்​கள் ஆஜராவ​தில் இருந்து விலக்கு அளிக்​கப்​படு​கிறது. அதே​நேரம் காவல்​துறை அதி​காரி​கள் அடுத்த விசா​ரணை தேதி​யில் ஆஜராக வேண்​டும். இந்த வழக்கு மார்ச் 18-ல் விசா​ரணைக்கு எடுக்​கப்​படும். அன்று காவல்​துறை அதி​காரி​கள் தகுந்த பதில் அளிக்​கா​கா​விட்​டால் அவர்​கள் மீது குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்​யப்​படும்.

தின​மும் விசா​ரணை நடத்​தப்​படும் என அதி​காரி​களை எச்​சரிக்​கிறேன். ஒத்​திவைப்பு கலாச்​சா​ரத்​தில் எனக்கு நம்​பிக்கை இல்​லை. இந்த மாத இறு​திக்​குள் ஏதேனும் ஒரு வழி​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வழக்கு முடிவுக்கு கொண்​டு​வரப்​படும். உயர​தி​காரி​கள் பொறுப்​பற்ற கருத்​துக்​களைத் தெரி​வித்​தால், அவர்​களும் விசா​ரணை வளை​யத்​துக்​குள் கொண்​டு​வரப்​படு​வார்​கள். சட்​டத்​தின் முன் அனை​வரும் ஒன்​று​தான், உயர் பதவி​களை வகிப்​ப​தால் மட்​டுமே யாரும் விதி​விலக்கு கோர முடி​யாது என்​பதை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறி​யுள்​ளார்.

திருப்பரங்குன்றம் வழக்கில் மார்ச் 18-ல் குற்றச்சாட்டு பதிவு: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
“மம்தா அரசு அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது” - பிரதமர் மோடி கடும் சாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in