அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வகை செய்யும் பதிவு சட்டப்பிரிவு 34-சி ரத்து செய்து உத்தரவு

அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வகை செய்யும் பதிவு சட்டப்பிரிவு 34-சி ரத்து செய்து உத்தரவு
Updated on
2 min read

மதுரை: பத்​திரப் பதி​வின்​போது முந்​தைய அசல் ஆவணங்​களை சமர்ப்​பிக்​கும் வகை​யில் பதிவுச் சட்​டத்​தில் சேர்க்​கப்​பட்ட 34-சி பிரிவை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கொடைக்​கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் போலி பத்​திரப் பதிவு​களை தடுக்​கும் நோக்​கில் 1908-ம் ஆண்​டின் பதிவுச் சட்​டத்​தில் 34சி பிரிவு சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி, சொத்து விற்​பனை​யாளர்​கள் முந்​தைய அசல் ஆவணங்​களை சமர்ப்​பிப்​பது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், சொத்தை விற்​கும் நபர், அந்த சொத்​துக்​கான முந்​தைய அசல் ஆவணத்​தை​யும், 10 நாட்​களுக்​குள் பெறப்​பட்ட வில்​லங்​கச் சான்​றிதழையும் சமர்ப்​பிக்க வேண்​டும். முந்தைய அசல் ஆவணம் தொலைந்​து​விட்​டால், காவல் துறை​யின் தேடலில் கிடைக்​காத சான்​றிதழ் மற்​றும் நாளிதழில் கொடுக்​கப்​பட்ட விளம்பர நகல் சமர்ப்​பிக்க வேண்​டும், அடமானம் இருந்தால் ‘தடை​யில்​லாச் சான்​று’ வழங்க வேண்​டும். இப்​பு​திய பிரிவுக்கு குடியரசுத் தலை​வர் கடந்த ஜன.23-ல் ஒப்​புதல் வழங்​கி​உள்​ளார்.

இருப்​பினும் சட்​டப்​பிரிவு தொடர்​பாக சார் பதி​வாளர்​களுக்கு தெளி​வான வழி​காட்டு​தல் இல்​லாத​தால் அசல் ஆவணங்​கள் இல்​லாமல் சொத்து ஆவணங்​களை பதிவு செய்ய சார் பதி​வாளர்​கள் தயக்​கம் காட்​டு​கின்​றனர். பத்​திரம் பதிவு செய்ய மறுக்​கின்​றனர். இதனால் பொது​மக்​கள் சிக்​கல்​களை சந்​தித்து வரு​கின்​றனர். எனவே பதிவுச் சட்​டத்​தில் சேர்க்​கப்​பட்ட 34-சி பிரிவு செல்​லாது என அறி​வித்து ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வு பிறப்​பித்த உத்தரவு: தமிழ்​நாடு பதிவுச்​சட்​டத்​திருத்​தத்​தின் பிரிவு 34 (சி), ஏற்​க​னவே உச்ச நீதி​மன்​றத்​தால் ரத்து செய்​யப்​பட்ட விதி 55-ஏ-ஐ மீண்​டும் உயிர்ப்​பிக்​கும் முயற்​சியை தவிர வேறில்லை. மேலும் சட்​டமன்​றம் நீதி​சார்ந்த அதி​காரங்​களை நிர்​வாகத்​துறை​யிடம் வழங்க முடி​யாது. இத்​தகைய செயல்​பாடு அதி​காரப் பகிர்வு கோட்​பாட்டை மீறு வதோடு அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 14-வது பிரிவை​யும் மீறு​வ​தாகும்.

அரசி​யலமைப்​பின் 300-ஏ பிரி​வின்கீழ் ஒரு​வரின் சொத்​துரிமைக்கு தன்​னிச்​சை​யான மற்​றும் நியாயமற்ற கட்​டுப்​பாடு​களை விதிப்​ப​தாக சட்​டத்​திருத்​தம் உள்​ளது. இது, விதிகளை மீறு​வதுடன், அதி​காரப் பகிர்வு கோட்​பாட்டை மீறு​வ​தாக​வும், தன்​னிச்​சை​யான​தாக​வும் உள்​ளது. இவற்றை கருத்​தில் கொண்டு இந்​தச் சட்​டத்​திருத்​தம் அதி​கார வரம்பை மீறியது என அறிவிக்​கிறோம். பதிவுச்​சட்​டத்​தின் 34 சி பிரிவைச் சேர்த்து பிறப்​பித்த சட்​டத்​திருத்​தத்தை ரத்து செய்​கிறோம். வில்​லங்கச் சான்​றிதழ் கோரும்போது சொத்​தின் தற்​போதைய அல்​லது முந்​தைய வில்​லங்​கங்​கள் குறித்​தும் தெரிவிக்​கப்பட வேண்​டும்.

வில்​லங்கச் சான்​றிதழில் நிலஅளவை எண், கதவு எண் ஆகிய​வற்​றை​யும் வழங்​கு​மாறு பதிவுத் துறைத் தலை​வருக்கு உத்​தர​விடு​கிறோம். இப்​பணி தமிழ்​நாடு முழு​வதும் உள்ள அனைத்து சார்​-ப​தி​வாளர் அலு​வல​கங்​களி​லும் உடனடி​யாகத் தொடங்​கப்​பட்​டு, குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் படிப்​படி​யாக அமல்​படுத்​த வேண்​டும். இந்த நடவடிக்​கை​யால் அனைத்​துப் பதிவு​களும் வில்​லங்​கப் பதிவேடு​களில் சரி​யாகப்பிர​திபலிக்​கப்​படும். இதனால் போலி பதிவு தொடர்​பான அரசின் அச்​சம் தீர்க்​கப்​படு​வதுடன், பொது​மக்​கள் பதிவுக்கு முன்பு முழு​மை​யான ஆய்வை மேற்​கொள்​ள​வும் வழி​வகுக்​கும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் கூறி​யுள்​ளனர்.

அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வகை செய்யும் பதிவு சட்டப்பிரிவு 34-சி ரத்து செய்து உத்தரவு
முதல்வர் விஜய் ஆக்‌ஷனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ரியாக்‌ஷனும் சரியா? - ஒரு ‘மாண்புமிகு’ பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in