எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்

எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: கோவை மருத்​துவ தம்​ப​தி​களான சகுபர் சாதிக் - ஹஸ்​மத் பர்​சா​னா, தங்​கள் மருத்​து​வ​மனையை அடமான​மாக வைத்து எல்​ஐசி வீட்டு வசதி நிதி நிறு​வனத்​தில் கடன் பெற்​னர்.

கரோனா கால​கட்​டத்​தில் நிதி நெருக்​கடி​யால் கடனை திருப்பி செலுத்த முடி​யாமல் ஒரே தவணை​யாக ரூ.4 கோடி செலுத்​து​வ​தாக பேசி முடிவு செய்​தனர்.

அந்த தொகையை எல்​ஐசி நிதி நிறு​வனத்​தில் செலுத்தி பத்​திரத்தை மீட்டு ரெப்கோ வங்​கி​யில் கூடு​தல் கடன் பெறும் நோக்​கில், தனி​யார் நிதி நிறு​வனத்​தைச் சேர்ந்த கார்த்​திகா கனக​ராஜ், மகா​ராஜா ஆகியோரிடம் இருந்து ரூ.3.94 கோடியை வட்​டிக்கு கடனாகப் பெற்​றனர். ரூ.2.43 கோடியை எல்​ஐசிக்கு செலுத்​தி​விட்​டு, மீதியை ஜூலை 30-க்​குள் செலுத்த அவகாசம் பெற்​றிருந்​தனர்.

இந்​நிலை​யில், கூடு​தலாக கந்து வட்டி கேட்டு மிரட்​டு​வ​தாக சம்​பந்​தப்​பட்ட பைனான்​சி​யர்​கள் மீது கோவை ஆர்.எஸ்​. புரம் காவல் ஆய்​வாளரிடம் மருத்​துவ தம்​ப​தி​யர் புகார் கொடுத்​தனர். இந்த நிலை​யில், அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்​யாமல், தங்​கள் வங்​கிக் கணக்கை போலீ​ஸார் முடக்​கி ​யுள்​ள​தாக குற்​றம்​சாட்டி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மருத்​துவ தம்​ப​தி​யர் மனு தாக்​கல் செய்​தனர்.

நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்பு இந்த மனு மீதான விசா​ரணை நடந்​தது. அப்போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அசன்​முகமது ஜின்​னா, வழக்​கறிஞர் எஸ்​.உதயகு​மார் ஆகியோர், ``புகார் மீது நடவடிக்கை எடுக்​காமல், புகார் கொடுத்​தவர்​களின் வங்​கிக் கணக்​கையே போலீ​ஸார் முடக்​கியது ஒருதலைபட்​ச​மானது.

ஆன்​லைன் மோசடி புகார்​கள் தவிர வேறு எந்த காரணத்​துக்​காக​வும் எஃப்ஐஆர் பதிவு செய்​யாமல் வங்​கிக் கணக்கை முடக்​கும் அதி​காரம் போலீ​ஸாருக்கு இல்​லை. இது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பு​கள் அடிப்​படை​யில் டிஜிபி ஏற்​கெனவே சுற்​றறிக்கை பிறப்​பித்​துள்​ளார்'' என்றனர்.

இதையடுத்து நீதிப​தி, ‘‘ஆன்​லைன் மோசடி தவிர்த்து வேறு எந்த காரணத்​துக்​காக​வும் எஃப்​ஐஆர் பதிவு செய்​யாமல் வங்​கிக் கணக்கை முடக்க போலீ​ஸாருக்கு அதி​காரமில்​லை. பணத்தை மோசடி செய்​த​தாக மனு​தா​ரர்​கள் மீது பைனான்​சி​யர்​கள் எந்த புகாரும் அளிக்​க​வில்​லை.

எனவே, வங்​கிக் கணக்கு முடக்​கத்தை வங்கி நிர்​வாகம் உடனே நீக்க வேண்​டும். மனு​தா​ரர்​கள் தங்​களிடம் உள்ள தொகை​யைக் கொண்டு எல்​ஐசி​யில் வாங்​கிய கடனை பைசல் செய்ய வேண்​டும். பின்​னர் ரெப்கோ வங்​கி​யில் கடன் பெற்று தனி​யார் பைனான்​சி​யர்​களின்​ கடனை பைசல்​ செய்​ய வேண்​டும்​’’ என்​று உத்​தர​விட்​டுள்​ளார்​.

எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்
எம்ஆர்பி விலைக்கு மட்டுமே மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in