காதல் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

காதல் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை​: ‘காதல் விவ​கார படு​கொலைகளை தடுக்க சிறப்புச் சட்​டம் நிறைவேற்ற அரசுக்கு உத்​தர​விட முடி​யாது’ என உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

தூத்​துக்​குடியைச் சேர்ந்த பொன் காந்​தி​ம​தி​நாதன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், ‘‘நெல்​லை​யில் மென்​பொருள் பொறி​யாளர் கவின், காதல் விவ​காரத்​தில் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

தமிழகத்​தில் காதல் விவ​கார கொலைகள் அதி​கள​வில் நடை​பெற்று வரு​கின்​றன. இதைத் தடுக்க தனிச்​சட்​டம் இல்​லை. எனவே காதல் விவ​கார கொலைகளை தடுக்க சிறப்​புச் சட்​டம் நிறைவேற்ற அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்’’ என கோரி​யிருந்தார்.

இந்த மனு நீதிப​தி​கள் சுரேஷ்கு​மார், வடமலை அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், ‘‘நெல்லை கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்டு நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. விசா​ரணை நீதி​மன்​றத்​தில் வழக்கு நிலு​வை​யில் இருக்​கிறது.

கவின் குடும்​பத்​துக்கு வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் உரிய இழப்​பீடு வழங்​கப்​பட்​டுள்​ளது. காதல் விவ​கார கொலைகளை தடுக்க சிறப்​புச் சட்​டம் நிறைவேற்​று​வது தொடர்​பாக ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் ஆய்​வுக்​குழு அமைக்​கப்​பட்டு அறிக்கை பெறப்​பட்​டுள்​ளது’’ என கூறப்​பட்டது.

இதையடுத்​து, ‘‘சிறப்​புச் சட்டம் இயற்ற அரசுக்கு நீதி​மன்​றம் உத்​தர​விட முடி​யாது. மனுமுடித்து வைக்கப்​படு​கிறது’’ என நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்​.

காதல் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு
வாக்குப்பதிவு இயந்திரங்களில் 4,023 வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in