லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை 18 மாதம் வரை பாதுகாக்க திறன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? - ஐகோர்ட்

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை 18 மாதம் வரை பாதுகாக்க திறன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? - ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: ‘லஞ்ச ஒழிப்​புத்​துறை காவல் நிலை​யங்​களில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை 18 மாதங்​கள் வரை பாது​காக்​கும் வகை​யில் திறன் மேம்​பாட்​டுக்​காக போது​மான நிதி ஒதுக்​காதது ஏன்?’ என்​பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ரேஷன் அரிசி கடத்​தலை அனு​ம​திக்க தன்​னிடம் ரூ.15 ஆயிரம் லஞ்​சம் கேட்​ட​தாக சேலம் குடிமைப்​பொருள் வழங்​கல் குற்​றப்​புல​னாய்​வுத் துறை ஆய்​வாளர் ராம​ராஜன், உதவி ஆய்​வாளர்​கள் சரவணக்​கு​மார், ராமகிருஷ்ணன் ஆகியோ​ருக்கு எதி​ராக சேலத்​தைச் சேர்ந்த சக்​திவேல் என்​பவர், லஞ்ச ஒழிப்​புத்​துறை​யில் புகார் அளித்​திருந்​தார். அதன்​பேரில் லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்​கின் உண்​மைத் தன்​மையை வெளிக்​கொண்டு வர, புகார்​தா​ர​ரான சக்​திவேல் மற்​றும் அவரது தாயாரின் செல்​போன் பதிவு​களை​யும், சேலம் லஞ்ச ஒழிப்​புத்​துறை அலு​வல​கத்​தில் உள்ள சிசிடிவி பதிவு​களை​யும் பாது​காக்​கக் கோரி குற்​றம்​சாட்​டப்​பட்ட உதவி ஆய்​வாளர் சரவணக்​கு​மார், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது சேலம் லஞ்ச ஒழிப்​புத்​துறை அலு​வல​கத்​தில் உள்ள கண்​காணிப்​புக் கேமரா பதிவு​கள் 15 நாட்​களுக்கு மட்​டுமே பாது​காக்​கப்​படு​வ​தாக லஞ்ச ஒழிப்​புத்​துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து வழக்கை விசா​ரித்த நீதிபதி வி.லட்​சுமி நாராயணன், கண்​காணிப்பு கேமரா பதிவு​களை குறைந்​தது 18 மாதங்​களுக்கு பாது​காக்க வேண்​டுமென உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ள நிலை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள காவல் நிலை​யங்​களில் கண்​காணிப்பு கேமரா பதிவு​கள் எவ்​வளவு காலத்​துக்கு பாது​காப்​பாக பராமரிக்​கப்​படு​கிறது என்​பது குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய தமிழக டிஜிபிக்கு கடந்த வாரம் உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, தமிழக டிஜிபி தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட அறிக்​கை​யில், ‘‘அனைத்து காவல் நிலை​யங்​களி​லும் கண்​காணிப்பு கேம​ராக்​களை பொருத்த வேண்​டுமென உச்ச நீதி​மன்​றம் கடந்த 2021-ம் ஆண்டு உத்​தர​விட்ட நிலை​யில், அதுதொடர்​பாக தமிழகத்​தில் 2 ஆண்​டு​கள் கழித்த பிறகே அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது.

இதனால் அனைத்து காவல் நிலை​யங்​களி​லும் கண்​காணிப்பு கேம​ராக்​களை பொருத்​தும்​பணி படிப்​படி​யாக நடந்து வரு​கிறது. அதே​போல 18 மாதங்​களுக்கு கேமரா பதிவு​களை பாது​காப்​பாக பராமரிக்க திறன் மேம்​பாட்​டுக்கு எந்​தவொரு நிதி​யும் ஒதுக்​கப்​பட​வில்​லை. நிதி ஒதுக்​கப்​பட்​டதும் அதற்​கான நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்’’ என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

அந்த அறிக்​கையை பதிவு செய்து கொண்ட நீதிபதி வி.லட்​சுமி நாராயணன், தமிழகம் முழு​வதும் உள்ள லஞ்ச ஒழிப்​புத்​துறை அலு​வல​கங்​களில் பொருத்​தப்​பட்​டுள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை 18 மாதங்​களுக்கு பாது​காப்​பாக பராமரிக்​கும் வகை​யில் திறன் மேம்​பாட்​டுக்​கான நிதியை ஒதுக்​காதது ஏன்? என்​பது குறித்து தமிழக மனிதவள மேலாண்மை துறைச் செயலர் பதிலளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை செப்​.17-க்​கு தள்​ளி வைத்​துள்​ளார்​.

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை 18 மாதம் வரை பாதுகாக்க திறன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? - ஐகோர்ட்
2035-க்​குள் இந்திய விண்வெளி நிலையம் அமையும்: சர்வதேச விண்​வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in