அரசு பேருந்து பயணச்சீட்டு புத்தக திருட்டு எவ்வளவு நடந்துள்ளது? - முழுப்பட்டியல் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

அரசு பேருந்து பயணச்சீட்டு புத்தக திருட்டு எவ்வளவு நடந்துள்ளது? - முழுப்பட்டியல் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
Updated on: 
1 min read

மதுரை: மதுரை அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் அசோக் மற்றும் ராமநாதபுரம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக நடத்துநர் அருள்குமார் ஆகியோரிடம் முறையே ரூ.1,11,198 மற்றும் ரூ.77,855 மதிப்புள்ள பயணச்சீட்டுப் புத்தகங்கள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பயணச்சீட்டுகளுக்கான தொகையை இருவரின் ஊதியத்தில் பிடித்தம் செய்து போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு தடை கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

பின்னர் நீதிபதி கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் பயணச்சீட்டுப் புத்தகங்கள் காணாமல் போனது தொடர்பாக பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை, அவற்றைத் தடுக்க நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணை நவ.2-க்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

அரசு பேருந்து பயணச்சீட்டு புத்தக திருட்டு எவ்வளவு நடந்துள்ளது? - முழுப்பட்டியல் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் விளம்பரம் மூலம் மோசடி: ஆர்டர் செய்தது ஹார்டு டிஸ்க் பார்சலில் வந்தது வாஷிங் பவுடர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in