

நாகர்கோவில்: கேஷ் ஆன் டெலிவரி மூலம் ரூ. 2,499-க்கு ‘சான்டிஸ்க்’ ஆர்டர் செய்தவருக்கு, ரூ. 10 மதிப்புள்ள வாஷிங் பவுடர் அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பூவாரை சேர்ந்தவர் சரிகா பிஜு. இவர், டெல்லியை மையமாக கொண்ட முகவரியில் ‘சான்டிஸ்க்’ ஹார்டு டிஸ்க் கேஷ் ஆன் டெலிவரி மூலம் ரூ. 2,499-க்கு சலுகை விலையில் ஆர்டர் செய்துள்ளார்.
அதன்படி தமக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது ரூ.10 மதிப்பிலான வாஷிங் பவுடர் இருந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பார்சலை திருப்பி அனுப்பும் வசதி அந்த நிறுவனத்தில் இல்லை என்பதால், ஆர்டரில் தெரிவித்த மொபைல் எண்களில் தொடர்பு கொண்டபோது அந்த எண்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரிகா சரிகா பிஜூ பூவார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.