தமிழகம் முழுவதும் மனமகிழ் மன்றங்களில் கூட்டு ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

உறுப்பினர்கள் அல்லாதோருக்கும் மதுபானம் விற்பனை
உயர் நீதிமன்றம், மதுரை.
உயர் நீதிமன்றம், மதுரை.
Updated on
1 min read

மதுரை: உறுப்​பினர்​கள் அல்​லாதோருக்​கும் மது​பானம் விற்​பனை செய்​யப்​படு​வது தொடர்​பாக தமிழகம் முழு​வதும் மனமகிழ் மன்​றங்​களில் கூட்டு ஆய்வு நடத்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

மதுரையைச் சேர்ந்த வழக்​கறிஞர் செல்​வக்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் அனைத்து மனமகிழ் மன்​றங்​களி​லும் திடீர் ஆய்வு நடத்தி சட்​ட​விரோத​மாக மது​பான விற்​பனை, சூதாட்​டம் உள்​ளிட்ட செயல்​களில் ஈடு​படும் மன்​றங்​கள் மீது குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​க​வும், விதி​முறை​களை மீறும் சங்​கங்​களின் பதிவை ரத்து செய்​ய​வும், பள்​ளி,கல்​லூரி, மருத்​து​வ​மனை, வழி​பாட்​டுத் தலங்​கள் அருகே செயல்​படும் மன மகிழ் மன்​றங்​களில் ஆய்வு செய்​ய​வும், எப்.எல்-2 உரிமங்​களை மறுஆய்வு செய்​ய​வும் கடந்த 18.08.2025-ல் உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​தது.

இருப்​பினும் எந்த நடவடிக்​கையும் எடுக்​க​வில்​லை. மேலும், கோயில்​கள், பள்​ளி​கள்மருத்​து​வ​மனை​கள், மசூதி உள்​ளிட்ட பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களுக்கு அருகே பல மனமகிழ் மன்​றங்​கள் தொடர்ந்து செயல்​பட்டு வரு​கின்​றன. அவற்​றில் போலி உறுப்​பினர் பதிவு​கள் மூலம் பொது​மக்​களுக்​குச் சட்​ட​விரோத​மாக மது​பானம் விற்​பனை செய்​யப்​படு​கிறது. பதிவு செய்​யப்​பட்ட சங்​கத்​தின் நோக்​கத்​துக்கு முரணாக வணிக ரீதி​யில் செயல்​படு​கிறது.

எனவே, தமிழகம் முழு​வதும் அனைத்து மனமகிழ் மன்​றங்​களி​லும் ஒரே நேரத்​தில் திடீர் மறை​முக ஆய்வு நடத்​தி, சட்​ட​விரோத​மாகச் செயல்​படும் மன்​றங்​களின் பதிவை ரத்து செய்​தல், எப்​.எல்-2 உரிமங்​களை ரத்து செய்​து, குற்​ற​வியல் நடவடிக்கை எடுப்​பதுடன், உயர்​நீ​தி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தத் தவறிய அதி​காரி​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மேலும், மாவட்ட வாரி​யாக மேற்​கொள்​ளப்​படும் நடவடிக்​கைகளை பொது​மக்​கள் பார்​வைக்கு வெளி​யிட வேண்​டும். மாநில அளவி​லான உயர்​மட்ட கண்​காணிப்​புக் குழுவை அமைக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேலு அமர்​வில் விசா​ரணைக்கு வந்​ததுபின்​னர் நீதிப​தி​கள், மனு​தா​ரர் வைக்​கும் குற்​றச்​சாட்டு தீவிர​மானது. மனமகிழ் மன்​றங்​களில் அங்கு உறுப்​பின​ராக உள்​ளோருக்கு மட்​டுமே மது வழங்க வேண்​டும். ஆனால் உறுப்​பினர் அல்​லாதோருக்​கும் மது வழங்​கப்படு​கிறது என்​பது ஏற்​புடையதல்ல.

எனவே, மனமகிழ் மன்​றங்​கள் அவ்​வப்​போது ஆய்​வுக்கு உள்​ளாக்​கப்பட வேண்​டும். மனு​தா​ரர் குறிப்​பிட்​டுள்ள 8 மனமகிழ் மன்​றங்​களி​லும் மதுரை மாவட்ட ஆட்​சி​யர் கண்​காணிப்​பில் கோட்​டாட்​சி​யர், மது​விலக்​குத் துறை​யினர், பதிவுத் துறை​யினர், காவல் துறை​யினர் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை ஆக.13-ம் தேதிக்கு தள்ளி வைக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டனர்.

உயர் நீதிமன்றம், மதுரை.
சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக வெற்றிமாறன் முதல் அமீர் வரை பேசியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in