தெரு, சாலைகளில் சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தெரு, சாலைகளில் சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: தெருக்கள், சாலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் கோரிய ஒரு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையை சாதிப் பெயருடன் தெரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை, சுட்டிக்காட்டிய நீதிபதி என்.ரமேஷ், ‘தெருக்கள், சாலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசு மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தும் தெருக்களின் பெயரில் சாதிப் பெயர்கள் இன்னும் இடம்பெற்றுள்ளது.

தெரு பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தெருக்கள், சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தெரு, சாலைகளில் சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
“புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை தாக்க நேரு எம்எல்ஏ முயற்சி” - வையாபுரி மணிகண்டன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in