சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டுமென போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்தது.
இதேபோல பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், தவறு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிறுமியின் தாயாரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டும்.

வழக்கின் புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை போக்சோ விதிகளுக்கு உட்பட்டு நடப்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் அடையாளத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு நியாயமான முறையில் பாரபட்சமற்ற முறையில் விசாரிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே ரூ. 4 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இறுதி இழப்பீட்டுத் தொகையை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அதேபோல காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான துறை ரீதியிலான விசாரணையை தமிழக அரசு சுதந்திரமாக மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.