உண்மையான நல்ல மாற்றம் தொடர வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்குகளில் சாதகமான பதில் மனு
Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
1 min read

மதுரை: நீர்​நிலைகள் ஆக்​கிரமிப்பு வழக்​கு​களில் சாதக​மான பதில் மனு தாக்​கல் செய்​வ​தாக தமிழக அரசை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிப​தி​கள் பாராட்​டி​யுள்​ளனர். இந்த நல்ல மாற்​றம் தொடர வேண்​டும் என்​றும் தெரி​வித்​துள்​ளனர்.

புதுக்​கோட்டை மாவட்​டம் மாத்​தூரை சார்ந்த காசி​ராஜன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: புதுக்​கோட்டை மாவட்​டம் தேவளி பெரியகுளத்​தில் சுமார் 15 ஏக்​கர் நிலம் தனி​நபர்​களால் ஆக்​கிரமிப்பு செய்​யப்​பட்டு கட்​டிடங்​கள் தார்ச் சாலைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

சிலர் சொந்த பட்டா நிலத்​துக்கு வழிப்​பாதை இல்​லாத​தால், நிலங்​களை அதிக விலைக்கு விற்​பனை செய்​வதற்​காக, நீர்​நிலை புறம்​போக்கு பகு​தியை ஆக்​கிரமிப்பு செய்​துள்​ளனர். ஊராட்சி அதி​காரி​கள் உதவி​யுடன் முறை​கே​டாக பட்​டாக்​கள் பெற்று, தற்​போது தார் சாலைகள் அமைத்து வரு​கின்​றனர். எனவே சட்​ட​விரோத பட்​டாக்​களை ரத்து செய்து நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை அப்​புறப்​படுத்த உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், பி.பு​கழேந்தி விசா​ரித்​தனர். அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் கண்​ணன் ஆஜராகி தார் சாலை போடப்​பட்​டுள்ளபகு​தி​கள் நீர்​நிலைகள்​தான், அதை அகற்ற நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரி​வித்​தார்.இதை தொடர்ந்து நீதிப​தி​கள் தெரி​வித்​த​தாவது:சம்​பந்​தப்​பட்ட நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை 3 மாதங்​களில் முழு​மை​யாக அப்​புறப்​படுத்த வேண்​டும். 3 மாதங்​களுக்கு பின்​னர், வழக்கை விசா​ரணைக்கு எடுக்​கும்​போது, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றியது குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டனர்.

இதே அமர்​வில் நீர்​நிலை ஆக்​கிரமிப்பு தொடர்​பாக பல்​வேறு வழக்​கு​கள் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது அரசுத் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​கள் புகார் குறித்து உரிய அளவீடு செய்து ஆக்​கிரப்​பு​களை அகற்ற நடவடிக்கை எடுக்​கப்​படும் என பதில் மனு தாக்​கல் செய்​தனர். இதையடுத்து நீதிப​தி​கள், நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​தும் ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​ப​டாத சூழல் இது​வரை இருந்​தது. தற்​போது அரசே அக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​படும் என பதில் மனு தாக்​கல் செய்​வதை பாராட்​டு​கிறோம். இந்த உண்​மை​யான நல்ல மாற்​றம் தொடர வேண்​டும் என்​றனர்.

Santhanakoodu Festival
“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” - எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in