“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” - எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” - எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
Updated on
1 min read

சென்னை: இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் உடல்நலக்குறைவு காரணமாக பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இசைக்குயில் எஸ்.ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு ரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும். 

இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், ரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” - எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
எஸ்.ஜானகி மறைவு: ரஜினிகாந்த், கமல் ஹாசன் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in