மாசாணி அம்மன் கோயில் ரூ.120 கோடி நிரந்தர வைப்பு நிதி விவகாரம்: அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

மாசாணி அம்மன் கோயில் ரூ.120 கோடி நிரந்தர வைப்பு நிதி விவகாரம்: அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பொள்​ளாச்சி அருகே ஆனைமலை​யில் உள்ள மாசாணி​யம்​மன் கோயில் தக்​கா​ராக ராஜ்கு​மார் என்​பவரை நியமித்து அறநிலை​யத்​துறை கடந்த ஜன.14 அன்று உத்​தர​விட்​டது. இதை எதிர்த்​தும் கோயில் நிரந்தர வைப்பு நிதி​யாக உள்ள ரூ. 120 கோடியை பயன்​படுத்த தடை கோரி​யும் கூடு​வாஞ்​சேரி நந்​திவரத்​தைச் சேர்ந்த பி.பாஸ்​கர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பி.ஜெகந் ​நாத், அறங்​காவலர்​களை நியமிப்​பது தாமத​மாகி வரு​கிறது. அறங்​காவலர் குழு தீர்​மானம் நிறைவேற்​றாமல் கோயிலுக்​குச் சொந்​த​மான நிரந்தர வைப்பு நிதி ரூ.120 கோடியை கையாளக் கூடாது என உத்​தர​விட வேண்​டும் என வாதிட்​டார்.

கோயில் நிர்​வாகம் மற்​றும் அறநிலை​யத் துறை தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஆர்​.சண்​முகசுந்​தரம், அறங்​காவலர்​களை நியமிக்க விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு பரிசீலனை​யும் நடந்து வரு​கிறது. வைப்பு நிதியை பயன்​படுத்தும் திட்​ட​ம் இல்லை என்​றார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், கடந்த ஓராண்​டாக இந்த கோயிலுக்கு அறங்​காவலர்​களை நியமிப்​ப​தில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்​பினர்.

பின்​னர் அறங்​காவலர்​கள் நியமனத்தை துரிதப்​படுத்த வேண்​டும் என்​றும், கோயில் நிரந்தர வைப்பு நிதியை பயன்​படுத்​தும் முன்​பாக சட்ட விதி​களை கண்​டிப்​பான முறை​யில் கடைபிடிக்க வேண்​டும் என்றும் அறநிலை​யத் துறைக்கு நீதிபதிகள் உத்​தரவிட்​டுள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in