பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
Updated on
1 min read

சென்னை: சைவம், வைணவம் குறித்​தும் பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் அவதூறாகப் பேசி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடிக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்கு விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

சென்​னை​யில் கடந்​தாண்டு ஏப்​ரலில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்று பேசிய அப்​போதைய திமுக அமைச்​சர் பொன்​முடி, சைவம், வைணவம் குறித்​தும் பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​னார்.

அவரது இந்த பேச்சு காரண​மாக அவர் தனது அமைச்​சர் பதவியை இழந்​தார். இந்​நிலை​யில் அவதூறாகப் பேசிய பொன்​முடி மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி சென்னை மாநக​ராட்சி பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்​தன், சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில் தனி நபர் புகார் அளித்​திருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றத்​தில் உள்ள சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்டு நிலு​வை​யில் உள்​ளது. இந்த வழக்​கில் பொன்​முடி நேரில் ஆஜராக அந்த நீதி​மன்​றம் சம்​மன் பிறப்​பித்​தது.

இந்​நிலை​யில் நீதி​மன்​றம் பிறப்​பித்த சம்​மனை எதிர்த்​தும், வழக்கு விசா​ரணைக்கு தடை கோரி​யும் பொன்​முடி தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா முன்​பாக நேற்று நடந்​தது.

அப்​போது பொன்​முடி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ, “முன்​னாள் அமைச்​சரின் அந்த பேச்சு இருதரப்​புக்​கும் இடையே மோதலை ஏற்​படுத்த வேண்​டும் என்ற உள்​நோக்​கம் கொண்​ட​தாக இல்​லை.

இந்த புகாரை வழக்​காக விசா​ரணைக்கு எடுக்​கும் முன்​பாக அரசின் முன் அனு​மதி பெற வேண்​டும் என்ற எங்​களது தரப்புவாதத்தை குற்​ற​வியல் நீதி​மன்​றம் கவனத்​தில் கொள்​ள​வில்லை” என வாதிட்​டார்.

அதையடுத்து பொன்​முடிக்கு எதி​ரான வழக்கு விசா​ரணைக்கு நீதிபதி இடைக்​காலத் தடை விதித்​தார். வழக்​கின் விசா​ரணைக்கு நேரில் ஆஜராவ​தில் இருந்​தும் விலக்கு அளித்​தார். அத்​துடன் இது தொடர்​பாக உமா ஆனந்​தன் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை 4 வாரத்​துக்கு தள்​ளி​வைத்​துள்​ளார்.

பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
தவெக பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in