மேட்டூர் அணை நீர்மட்டம் 99.84 அடியாக சரிந்த நிலையில், இடதுகரையில் உள்ள 16 கண் மதகு பகுதியின் கீழ் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 99.84 அடியாக சரிந்த நிலையில், இடதுகரையில் உள்ள 16 கண் மதகு பகுதியின் கீழ் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

443 நாட்களுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு

Published on

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்டூர் அணை நீர்​மட்​டம் 443 நாட்​களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்​தது. அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 6,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்டூர் அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு 2025 ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​பட்​டது. அப்​போது, அணை​யின் நீர்​மட்​டம் 114.91 அடி​யாக​வும், நீர் இருப்பு 85.58 டிஎம்​சி​யாக​வும், நீர்​வரத்து 6,339 கன அடியாக​வும் இருந்​தது.

தொடர்ந்​து, கனமழை​யால் கர்​நாட​கா​வில் உள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. காவிரி​யில் உபரி நீர் திறக்​கப்​பட்​ட​தால் மேட்டூர் அணை முழு கொள்​ளள​வான 120 அடியை ஜூன் 29-ம் தேதி எட்​டியது.

இதையடுத்து அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்​டது. தொடர் மழை​யால் மேட்டூர் அணை 7 முறை முழு கொள்​ளளவை எட்​டியது. பின்​னர், காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை குறைந்​த​தால் நீர்​வரத்து சரிந்​து, அணை​யின் நீர்​மட்​டம் குறைந்து வரு​கிறது.

2024 அக். 23-ம் தேதி மேட்டூர் அணை நீர்​மட்​டம் 100 அடியை எட்​டியது. நேற்று காலை வரை 443 நாட்​களாக அணை​யின் நீர்​மட்​டம் 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்த நிலை​யில், நேற்று காலை நீர்​மட்​டம் 99.84 அடி​யாக​வும், நீர் இருப்பு 64.63 டிஎம்​சி​யாக​வும் குறைந்​தது.

தண்ணீர் திறப்பு குறைப்பு: அணைக்கு விநாடிக்கு 208 கனஅடி​யாக நீர்​வரத்து இருந்த நிலை​யில், டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு நேற்று மாலை 6 மணி முதல் விநாடிக்கு 8,000 கனஅடியி​லிருந்து 6,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கால்​வாய் பாசனத்​துக்கு 400 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது.

ஒகேனக்​கல் காவிரி​யில் விநாடிக்கு 2,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று முன்​தினம் காலை 3,000 கனஅடி​யாக அதி​கரித்​தது. அதே​ நேரத்​தில், நேற்று காலை மீண்​டும்​ 2,000 கனஅடி​யாக குறைந்​தது.

<div class="paragraphs"><p>மேட்டூர் அணை நீர்மட்டம் 99.84 அடியாக சரிந்த நிலையில், இடதுகரையில் உள்ள 16 கண் மதகு பகுதியின் கீழ் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.</p></div>
பெருமாநல்லூர் அருகே கோயில் அகற்றம்: போராட்டத்தின்போது இந்து முன்னணி தலைவர் காயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in