நீலகிரி, தேனி மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, தேனி மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: நீல​கிரி, தேனி மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது:

தமிழக கடலோரப் பகு​தி​களில் கீழ்​மட்ட வளிமண்​டலத்​தில் ஒரு பலவீன​மான காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்​றும், நாளை​யும் (ஆக.13, 14) நீல​கிரி, தேனி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கனமழை பெய்​யக்​கூடும்.

இன்று மதுரை, திண்​டுக்​கல், சிவகங்​கை, புதுக்​கோட்டை மாவட்டங்​களி​லும், நாளை மேற்​கண்ட 4 மாவட்டங்​களு​டன், ராமநாத​புரம், திருச்​சி, அரியலூர், பெரம்​பலூர், கரூர், நாமக்​கல், சேலம், ஈரோடு, கோவை, திரு​வண்​ணா​மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்​புரம் மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களி​லும் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தின் மற்ற பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேக மூட்டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்​யக்​கூடும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

நீலகிரி, தேனி மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in