ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ
Updated on
1 min read

சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு தொடர்​பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதி​காரப்​பூர்வ விசாரணையைத் தொடங்கி உள்​ளது.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங், சென்னை​யில் 2024 ஜூலை 5-ம் தேதி இரவு படு​கொலை செய்யப்பட்​டார். சென்னை செம்​பி​யம் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். இந்த வழக்​கில் 30 பேர் மீது 7,411 பக்க குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டது. முக்​கிய குற்றவாளி​களான திரு​வேங்​கடம், சீசிங் ராஜா ஆகிய இரு​வ​ரும் என்கவுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டனர்.

தமிழக காவல் துறை​யின் விசா​ரணை​யில் திருப்தி இல்​லாத​தால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்​டும் என்று ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் இமானுவேல் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இதையடுத்​து, காவல் துறை தாக்​கல் செய்த குற்​றப்​பத்​திரி​கையை ரத்து செய்த நீதி​மன்​றம், 2025 செப்​.24-ம் தேதி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் கடந்த ஜூலை 22-ம் தேதி தள்​ளு​படி செய்​து, சிபிஐ விசா​ரணையை உறுதி செய்​தது.

இதைத் தொடர்ந்​து, ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் 8 பேர் மீது 5 பிரி​வு​களின்​கீழ் சிபிஐ தற்​போது முதல் தகவல் அறிக்கை (எஃப்​ஐஆர்) பதிவு செய்​துள்​ளது. செம்​பி​யம் காவல் நிலைய ஆவணங்​கள் மற்​றும் நீதி​மன்ற உத்​தர​வு​களின் அடிப்​படை​யில், சிபிஐ இந்த வழக்கை மறு​ப​திவு செய்து தீவிர விசா​ரணை​யைத் தொடங்கியுள்​ளது.

விசா​ரணை அதி​காரி​யாக சிபிஐ கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் ஆர்​.ரவி நியமிக்​கப்​பட்​டுள்​ளார். வழக்கு சிபிஐ வசம் சென்​றுள்​ள​தால், கொலைக்​கான உண்​மை​யான காரணங்​கள், சதித் திட்​டங்​கள் குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தப்​படும்​ என்​று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ
வீட்டில் கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரம்: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in