வானிலை முன்னறிவிப்பு: 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் இன்று டெல்டா உள்​ளிட்ட 22 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்​திக்​ குறிப்​பு: குமரிக்​கடல் முதல் தென்​மேற்கு மத்​திய பிரதேசம் வரை விதர்​பா, மரத்​வா​டா, உள் கர்​நாட​கா, ராயலசீமா மற்​றும் தமிழகம் வழி​யாக சுமார் 900 மீட்​டர் உயரத்​தில் ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்வு பாதை நில​வு​கிறது. குமரிக்​கடல் பகு​தி​களின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்​தில் ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது.

இதன் காரண​மாக, இன்​றும், நாளை​யும் தென் தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், 11 முதல் 14-ம் தேதி வரை தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும், இடி மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​ கூடும்.

இன்​றும், நாளை​யும் நீல​கிரி, கோவை, ஈரோடு, திருப்​பூர், திண்​டுக்​கல், மதுரை, தேனி, தென்​காசி, விருதுநகர், திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, சிவகங்​கை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, திருச்​சி, நாமக்​கல், கரூர் மாவட்​டங்​கள், டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் பலத்த காற்​றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்​தில்) கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஓரிரு பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்​ய ​வாய்​ப்​புள்​ளது. இவ்​வாறு செய்​திக் ​குறிப்​பில்​ தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.

வானிலை முன்னறிவிப்பு: 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 மே 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in