இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை

இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் நீல​கிரி, கோவை உள்​ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு உள் கர்​நாடகா முதல் மன்​னார் வளை​குடா வரை தமிழக பகு​தி​கள் வழி​யாக சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்​றழுத்த தாழ்வு பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று நீல​கிரி, கோவை, திரு​வண்​ணா​மலை, வேலூர், திருப்​பத்​தூர் மற்​றும் ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் திரு​வண்​ணா​மலை, கிருஷ்ணகிரி, தரு​மபுரி, சேலம், நாமக்​கல், கரூர், ஈரோடு, திருப்​பூர், திருச்​சி, அரியலூர், பெரம்​பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்​கை, புதுக்​கோட்​டை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும்.

17-ம் தேதி நீல​கிரி, கோவை, கரூர், திருச்​சி, பெரம்​பலூர், அரியலூர் மற்​றும் தஞ்​சாவூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும்.

18-ம் தேதி நீல​கிரி மற்​றும் கோவை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை​யும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், கடலூர், மயி​லாடு​துறை, விழுப்​புரம், திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்​டை, கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, கிருஷ்ணகிரி, தரு​மபுரி, சேலம், நாமக்​கல், கரூர், ஈரோடு, திருச்​சி, அரியலூர், பெரம்​பலூர் மாவட்​டங்​களில் மித​மான மழை​ பெய்யக் கூடும்.

19-ம் தேதி நீல​கிரி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், திரு​வண்​ணா​மலை, திருப்​பத்​தூர், ராணிப்​பேட்டை மற்​றும் திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் இதர வட தமிழக மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் மித​மான மழை​யும், தென் தமிழக மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்​ என வானிலை ஆய்​வு மையம்​ தெரி​வித்​துள்​ளது.

இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை
​முல்​லைப் பெரி​யாறு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்ட தமிழகம் எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in