​முல்​லைப் பெரி​யாறு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்ட தமிழகம் எதிர்ப்பு

ஆவண சரிபார்ப்புக்குப்பின் உச்​ச நீ​தி​மன்​றத்தில் விசாரணை
​முல்​லைப் பெரி​யாறு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்ட தமிழகம் எதிர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: முல்லைப் பெரி​யாறு அணை நீர்ப்​பிடிப்​புப் பகுதி அருகே வாகன நிறுத்​து​மிடம் அமைக்​கும் கேரள அரசின் நடவடிக்​கைக்கு தடை கோரிய தமிழக அரசின் வழக்​கு, ஆவணங்​கள் சரி​பார்ப்பு முடிந்த பின்​னர் விசா​ரணைக்கு எடுக்​கப்​படும் என உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

முல்லைப் பெரி​யாறு அணை அருகே உள்ள நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​யில் படகு சவாரி செய்ய தேக்​கடிக்கு வரும் சுற்​றுலாப் பயணி​களின் வாக​னங்​களை நிறுத்​து​வதற்கு வசதி​யாக குமுளி அருகே உள்ள ஆனவச்​சால் பகு​தி​யில் 2 ஏக்​கர் பரப்​பில் வாகன நிறுத்​து​மிடம் அமைக்க கேரள வனத்​துறை இடம் தேர்வு செய்​தது.

இதையடுத்து, முல்​லைப் பெரி​யாறு அணைப்​பகு​தியை ஒட்​டி​யுள்ள தமிழக பகு​தி​களை கேரள அரசு ஆக்​கிமிரத்து வரு​வ​தாக கூறி கடந்த 2014-ல் தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடர்ந்​தது. இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், வாகன நிறுத்​தப்​பகுதி கடந்த 1886 ஆண்டு அக்​டோபர் 29-ம் தேதி ஒப்​பந்​தப்​படி​யான ஒப்​பந்த எல்​லைக்​குள் வரு​கிற​தா? இல்லை கேரளா பகு​திக்​குள் வரு​கிற​தா? என்​பதை கண்​டறிய நில அளவீடு செய்ய உத்​தர​விட்​டது.

குறிப்​பாக, இந்​திய நில அளவைத்​துறை அல்​லது பரிந்​துரை செய்​யப்​படும் அதி​காரி​கள் சர்வே நடத்த வேண்​டும் எனவும், அதன் அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டும் எனவும் உத்​தர​விட்​டது. அதன் அடிப்​படை​யில், முல்​லைப் பெரி​யாறு வாகன நிறுத்​து​மிடம் பகு​தி​யில் நடத்​தப்​பட்ட சர்​வே​யின் இறுதி அறிக்கை உச்​சநீ​தி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்டது.

அதில், முல்​லைப்​ பெரி​யாறு அணை​யில் கேரளா அரசு கட்டி வரும் வாகன நிறுத்​து​மிடம் பிரச்​சினைக்​குரிய இடத்​தில் இல்லை எனவும், வாகன நிறுத்​து​மிடம் முழுக்க முழுக்க கேரள அரசின் கட்​டுப்​பாட்​டில் உள்ள பகுதி ஆகும் என இந்​திய நில அளவைத்​துறை தனது அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில், முல்லைப் பெரி​யாறு அணை பகு​தி​யில் வாகன நிறுத்​து​மிடம் கட்​டு​வதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் திபாங்​கர் தத்​தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, முல்லைப் பெரி​யாறு வாகன நிறுத்​து​மிடம் வழக்கு விவ​காரம் தொடர்​பாக பதி​வாளர் நீதி​மன்​றத்​தில் ஆவணங்​கள் சரி​பார்ப்பு நடை​முறை​கள் நடை​பெற்று வரு​வ​தால், அது முடிவுற்ற பிறகு வழக்கை விசா​ரணைக்கு பட்​டியலிட வேண்​டுமென்று தமிழ்​நாடு அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் உமாபதி ஆஜராகி கோரிக்கை வைத்​தார்.

அந்த, கோரிக்​கையை ஏற்றுக்​ கொண்ட நீதிப​தி​கள், பதி​வாளர் நீதி​மன்​றத்​தில் வழக்​கின் ஆவணங்​கள் சரி​பார்ப்பு முடிந்த பின்​னர் முல்​லைப் பெரி​யாறு வாகன நிறுத்​து​மிடம் தொடர்​பான வழக்கு வி​சா​ரணைக்கு எடுக்​கப்​படும்​ என்​று தெரி​வித்​து வழக்​கை ஒத்​தி வைத்​தனர்​.

​முல்​லைப் பெரி​யாறு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்ட தமிழகம் எதிர்ப்பு
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு டிஜிட்டல் மயம்: நடைமுறையை அறிந்து கொள்ள தமிழகம் முழுவதும் உதவி மையம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in