கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு 15,000 கனஅடி நீர் திறப்பு

அணைகள் வேகமாக நிரம்புவதால் பாதுகாப்பு கருதி நடவடிக்கை
கனமழை காரணமாக குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணை திறந்துவிடப்பட்டது

கனமழை காரணமாக குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணை திறந்துவிடப்பட்டது

Updated on
2 min read

பெங்களூரு: கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்​து​ வரு​வ​தால் அங்​குள்ள கபினி, ஹாரங்​கி, கிருஷ்ண​ராஜ​சாகர் உள்​ளிட்ட அணை​கள் வேக​மாக நிரம்பி வரு​கின்​றன. இதனால் அணை​களின் பாது​காப்பு கரு​தி, தமிழகத்​துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலைக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த மே மாத இறு​தி​யில் வழக்​க​மான அளவுக்கு தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்​ய​வில்​லை. இதனால் காவிரி ஆற்​றின் குறுக்கே உள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய 4 அணை​களுக்​கும் போதிய நீர்​வரத்து இல்​லாமல் வறண்டு காணப்​பட்​டன.

இதனால், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி ஜூன், ஜூலை மாதங்​களில் தமிழகத்​துக்கு திறக்க வேண்​டிய நீரை கர்​நாடக அரசு திறக்​க​வில்​லை. தமிழக அரசு கடந்த 28-ம் தேதி காவிரி ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டத்​தில் முறை​யிட்​டதை அடுத்​து, 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​விட வேண்​டும் என ஒழுங்​காற்​றுக் குழு உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணை​யத்​தில் கர்​நாடக அரசு மேல்​முறையீடு செய்​தது. கர்​நாட​கா​வின் கோரிக்​கையை நிராகரித்த மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு 15 நாட்​களுக்கு 3,500 கனஅடிநீரை திறந்​து​விடு​மாறு உத்​தர​விட்​டது.

இதை கண்​டித்து கர்​நாட​கா​வில் கன்னட அமைப்​பினர், விவ​சாய அமைப்​பினர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தமிழக முதல்​வர் விஜய்​யின் 'ஜன​நாயகன்' திரைப்​படம் வெளி​யான திரையரங்​கு​களை முற்​றுகை​யிட்​டனர். பேனர்​களை கிழித்​ததோடு, கர்​நாடகா முழு​வதும் ‘ஜன​நாயகன்’ திரை​யிடலை நிறுத்​தினர்.

இதன் காரண​மாக, பதற்​ற​மான சூழல் நில​விய​தால்​, ​முதல்​வர் விஜய்​யின் பெங்​களூரு பயணத்தை தள்​ளிவைக்​கு​மாறு கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் கோரிக்கை விடுத்​தார்.

கருணை காட்​டிய மழை: காவிரி பங்​கீட்டு விவ​காரத்​தில் தமிழகம் - கர்​நாடகா இடையே மோதல் முற்​றிவந்த நிலையில், கடந்த 31-ம் தேதி மாலை காவிரிநீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்​யத் தொடங்​கியது.

காவிரி உற்​பத்​தி​யாகும் தலைக்​கா​விரி​யில் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்​டியது. குடகு மாவட்​டத்​தில் பாகமண்​டலா, மடிகேரி, சோம​வார்​பேட்​டை, வீராஜ்பேட்டை உள்​ளிட்ட இடங்​களில் கொட்​டிய மழை​யால் காவிரி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. விடிய விடிய பெய்த மழை நேற்று வரை விடா​மல் கொட்​டித் தீர்த்​தது.

இதற்​கிடையே, காவிரி​யின் முக்​கிய துணை நதி​யான கபினி உற்​பத்​தி​யாகும் கேரள மாநிலம் வயநாட்​டிலும் கடந்த 2 நாட்​களாக கன‌மழை பெய்து வருகிறது. இதனால், கபினி ஆற்றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

மைசூரு மாவட்​டம் எச்​.டி.கோட்​டை​யில் உள்ள கபினி அணைக்கு நேற்று முன்​தினம் 6,000 கனஅடி நீர் வந்​து​கொண்​டிருந்த நிலை​யில், நேற்று பிற்​பகல் 16,000 கனஅடி​யாக அதி​கரித்​தது. இதனால் அணையின் நீர்​மட்​டம் கிடு​கிடு​வென உயர்ந்தது. இதே​போல, குடகு மாவட்​டத்​தில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்​கும் நீர்​வரத்து அதி​கரித்​ததால், 2 அணை​களின் நீர்​மட்​ட​மும் வேக​மாக உயரத் தொடங்​கின.

கடல் மட்​டத்​தில் இருந்து 2,284 அடி உயரத்​தில் உள்ள க‌பினி அணை​யின் நீர்​மட்​டம் நேற்று பிற்​பகல் 2 மணிக்கு 2,280 அடி​யாக உயர்ந்​தது. இதனால் அணை​யின் பாது​காப்பு கரு​தி, தமிழகத்​துக்கு காவிரி​யில் விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்​டது. அணைக்கு தொடர்ந்து நீர்​வரத்து அதி​கரித்​த​தால் மாலை 5 மணிக்கு 10,000 கனஅடி​யாகவும், இரவு 8 மணி நில​வரப்​படி விநாடிக்கு 15,000 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​ட‌து.

வெள்ள அபாய எச்சரிக்கை: கபினி அணை​யில் இருந்து திடீரென அதிக அளவில் நீர் திறக்​கப்​பட்​ட​தால் காவிரி ஆற்​றில் கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், கரையோர மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. ​கா​விரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் பெய்​து​வரும் கனமழை​யால் கபினி, ஹாரங்கி ஆகிய 2 அணை​களும் முழு கொள்​ளளவை நெருங்​கி​யுள்​ளன. 2 அணை​களும் ஓரிரு நாளில் முழு கொள்​ளளவை எட்​டும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், கபினி அணை​யைப் பார்​வை​யிட கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று மைசூரு சென்​றார். அங்கு செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

‘நீரை தேக்க முடி​யாது’ - இரு மாநிலங்​கள் இடையே சுமுக​மான சூழல் நிலவ வேண்​டும் என காவிரித் தாயிடம் வேண்​டினேன். நல்ல முறை​யில் மழை பெய்​வ​தால் அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. அந்த நீரை தேக்கி வைத்​தால் அணை​களுக்கு ஆபத்​தாகி​விடும்.

எனவே, நீரை தேக்கி வைக்க முடி​யாது. தமிழகத்துக்கு நீரை திறக்​காமல் தடுத்​தால் நம் அனை​வரை​யும் அடித்​துச் சென்​று​விடும். விவ​சா​யிகளும், கன்னட அமைப்​பினரும் தண்​ணீரை தடுப்​ப​தாக சொல்லி ஆற்​றில் இறங்​கிப் போராட வேண்​டாம். அவர்​களது உயிர்​கள் விலை மதிப்​பற்​றவை.

13-ம் தேதி அறி​வித்த முழு அடைப்பு போராட்​டத்​தை​யும் நடத்த வேண்​டாம். இயற்கை அனை​வருக்​கும் சொந்​த​மானது. நீரை தரக்கூடாது என சொல்​லக் கூடாது. இரு மாநிலங்​களும் பயனடைய வேண்​டும் என்​பதே என் விருப்​பம். இவ்​வாறு அவர் கூறி​னார்.இதற்கிடையே, காவிரி நீர் பங்​கீடு குறித்து விவா​திக்க, கர்நாடக முதல்​வர் சிவகுமார் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

<div class="paragraphs"><p>கனமழை காரணமாக குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணை திறந்துவிடப்பட்டது</p></div>
“இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு இளைஞர் சக்தியே முக்கிய காரணம்” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in