கனமழையால் சபரிமலையில் பெருவெள்ளம்: பம்பை ஆற்று பாலத்தில் கயிறு கட்டி தடுப்பு அமைப்பு

பத்​தினம்​திட்டா மாவட்​டத்​தில் பெய்​யும் கனமழை காரண​மாக பம்பை நதி​யில் கரைபுரண்டு ஓடும் வெள்​ளம்.

பத்​தினம்​திட்டா மாவட்​டத்​தில் பெய்​யும் கனமழை காரண​மாக பம்பை நதி​யில் கரைபுரண்டு ஓடும் வெள்​ளம்.

Updated on
1 min read

குமுளி: கேரளத்​தில் பெய்​து​வரும் கனமழை​யால் சபரிமலை​யில் கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. பாது​காப்பு காரணங்​களுக்​காக, பம்பை ஆற்​றுப் பாலத்​தின் குறுக்கே கயிறு கட்டி தடுப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. எனவே, சபரி மலைக்கு பக்​தர்​கள் செல்ல முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

கேரளத்​தில் தென்​மேற்​குப் பரு​வ​மழை ஜூன் 4-ல் தொடங்​கி, 2 நாட்​களி​லேயே வலு​விழந்​தது. இதனால், அங்கு மழை​யின்றி வெயி​லின் தாக்​கம் அதி​கரித்து இருந்​தது. இந்​நிலை​யில், கடந்த 2 நாட்​களாக மாநிலத்​தின் பல்​வேறு பகு​தி​களி​லும் கனமழை பெய்து வரு​கிறது.

இதனால், மலப்​புரம், வயநாடு உள்​ளிட்ட 5 மாவட்​டங்​களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்​சரிக்​கை​யும், இடுக்​கி, பத்​தினம்​திட்​டா, எர்​ணாகுளம், பாலக்​காடு உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களுக்கு ஆரஞ்ச் எச்​சரிக்​கை​யும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. பத்​தினம்​திட்​டா​வில் பெய்து வரும் கனமழை​யால் சபரிமலை பம்பை ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. மேலும், இதன் முகத்​து​வார​மான புலாச்​சிமலை​யில் மழை தொடர்ந்து பெய்​வ​தால், நீரின் அளவு அதி​கரித்து கொண்டே செல்​கிறது.

சபரிமலை​யின் அடி​வாரப் பகு​தி​யில் இரண்டு கரைகளை​யும் தொட்​டபடி வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. எனவே, பாது​காப்பு காரணங்​களுக்​காக பம்பை ஆற்​றுப் பாலத்​தின் நுழைவுப் பகு​தி​களில் கயிறு கட்டி தடுப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சபரிமலை ஐயப்​பன் கோயிலை பொறுத்​தள​வில், நிறைபுத்​தரிசி வழி​பாட்​டுக்​காக நாளை (ஞா​யிறு) மாலை கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது. இதற்​காக, ஏராள​மான ஐயப்ப பக்​தர்​கள் முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

இதற்காக பக்​தர்​கள் ஞாயிறு, திங்​களில் பம்​பையை கடந்து சபரிமலை செல்ல இருந்த நிலை​யில், கனமழை​யால் அபாயகர​மான சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. எனவே, பக்​தர்​கள் வழி​பாட்​டுக்​குச் செல்​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டு உள்ளது.

<div class="paragraphs"><p>பத்​தினம்​திட்டா மாவட்​டத்​தில் பெய்​யும் கனமழை காரண​மாக பம்பை நதி​யில் கரைபுரண்டு ஓடும் வெள்​ளம்.</p></div>
“இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு இளைஞர் சக்தியே முக்கிய காரணம்” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in