மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு - மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை

| குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. | பழைய குற்றாலம் அருவிக்கரையில் தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தில் சேதமடைந்தன. | மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. | கடனாநதி அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. |

| குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. | பழைய குற்றாலம் அருவிக்கரையில் தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தில் சேதமடைந்தன. | மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. | கடனாநதி அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. |

Updated on
2 min read

திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப் பகுதிகள் மற்றும் சமவெளி பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 94, சேரன்மகாதேவி- 104.20, மணிமுத்தாறு- 27.40, நாங்குநேரி- 40, பாளையங்கோட்டை- 5.4, பாபநாசம்- 32, ராதாபுரம்- 5, திருநெல்வேலி- 9.6, சேர்வலாறு அணை- 91, கன்னடியன் அணைக்கட்டு- 51.40, களக்காடு- 48.40, கொடுமுடியாறு அணை- 14, மூலைக்கரைப்பட்டி- 40, நம்பியாறு அணை- 9, மாஞ்சோலை- 92, காக்காச்சி- 79, நாலுமுக்கு- 52, ஊத்து- 45.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 124.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 956 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 106.46 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 465 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 460 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருந்தது.

களக்காடு அருகே திருக்குறுங் குடி மலை நம்பிகோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு செல்லவும், குளிக்கவும் வனத் துறை தடைவிதித்திருந்தது. இதுபோல் களக்காடு தலையணையிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரண மாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருந்தது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெரும் பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் கடனாநதி அணையில் 239 மி.மீ., சிவகிரியில் 171 மி.மீ., ராமநதி அணையில் 120 மி.மீ., ஆய்க்குடியில் 103 மி.மீ., கருப்பாநதி அணையில் 77.50 மி.மீ., தென்காசியில் 50 மி.மீ., அடவிநயினார் அணையில் 12 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 77.70 அடியாக இருந்த நிலையில், ஒரே நாள் மழையில் அணை நிரம்பியது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணையில் நீர்மட்டம் 84 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. இதனால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநதி அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 72.75 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.30 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 115.50 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை முழு கொள்ளளவில் உள்ளது.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அருவிப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அந்த அருவியில் குளிக்க தடை நீடிக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தில் தடுப்புக் கம்பிகள் உள்ளிட்டவை மீண்டும் சேதமடைந்தன.

<div class="paragraphs"><p>| குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. | பழைய குற்றாலம் அருவிக்கரையில் தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தில் சேதமடைந்தன. | மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. | கடனாநதி அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. |</p></div>
சுசீந்திரம் கோயில் மார்கழி தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக கோஷம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in