“இனி காணொலி காட்சி வாயிலாக விசாரணை”- கள்ளக்குறிச்சி ஆட்சியர் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட் உத்தரவு

“இனி காணொலி காட்சி வாயிலாக விசாரணை”- கள்ளக்குறிச்சி ஆட்சியர் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று, இனி வழக்கு விசாரணை காணொலி காட்சி மூலமாகவே நடத்தப்படும் எனவும், வழக்குக்கு தேவையில்லாத வழக்கறிஞர்களுக்கு அனுமதி இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியருக்கு முறையற்ற குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன் அளித்த தீர்ப்பில், புகாரை படிக்கும் போது இந்த விவகாரத்தில் தேவையற்ற விளம்பரத்தை விரும்பாத காரணத்தாலேயே, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்காமல் விலகி தவிர்த்திருந்தது தெரிய வருகிறது.

இதுபோன்ற ஒரு விவகாரத்தில், பத்திரிகைகள் ஓரளவாவது பொறுப்புடன் நடந்திருக்கலாம். அது நடக்காததால், இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கிறது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், தடுப்பு, தடை மற்றும் நிவாரணம் அளித்தல் சட்டப்பிரிவு 16-ன் கீழ் வரும் எந்தவொரு விவகாரத்தையும் வெளியிடவோ? தொடர்புபடுத்தவோ? அல்லது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவோ? கூடாது என பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக, வழக்கு தொடர வேண்டும். ஒரு பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்துவதன் வாயிலாக, அவரை இழிவுப்படுத்துவது என்பது, காலங்காலமாக இருந்து வரும் பழமையான ஒரு உத்தியாகும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதிமுக திரிசூழி தொடர்ந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கள்ளக்குறிச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் மீறவில்லை என முறையீடு செய்தார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி லட்சுமிநாராயணன், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் (POSH) சட்டத்தின் பிரிவு 16-ன் படி, புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆகிய இருவரின் அடையாளங்களையும் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தக்கூடாது.

ஆனால், நீங்கள் அனைவரும் சம்மந்தப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கூறிய நீதிபதி, கள்ளக்குறிச்சி வழக்கு தொடர்பாக வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத பிற வழக்கறிஞர்களுக்கு விசாரணையின் போது அனுமதி இல்லை. ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கின் விசாரணை மாலை 3.30 மணிக்கு காணொலி காட்சி மூலமாக நடத்தப்படும்” என தெரிவித்த நீதிபதி விசாரணையை மாலை ஒத்திவைத்துள்ளார்.

“இனி காணொலி காட்சி வாயிலாக விசாரணை”- கள்ளக்குறிச்சி ஆட்சியர் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட் உத்தரவு
கள்ளக்குறிச்சி பாலியல் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் முறையீடு

X