

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று, தவெக எம்எல்ஏ எம்.எஸ்.ரவி, “தமிழகத்தில் ஹீமோஃபீலியா மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளிகளுக்கு எமிசிஜீமாப் (Emicizumab) என்ற மருந்தை இலவசமாக வழங்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் அளித்த பதில்: ஹீமோஃபீலியா-ஏ மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படும் எமிசிஜீமாப் மருந்து இந்திய அரசால் தேசிய சுகாதார இயக்கத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
ஹீமோஃ பீலியா-ஏ மருத்துவ பயனாளிகளுக்கு ரத்தக் கசிவை தடுப்பதில் குறிப்பிடத்தக்க மருத்துவ பயன்களை கருத்தில் கொண்டு, அந்த மருந்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.