போக்சோ நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

போக்சோ நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
2 min read

சென்னை: குழந்​தைகள், சிறார்​களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கு​களை விசா​ரிக்​கும் போக்சோ நீதி​மன்​றங்​களின் தற்​போதைய செயல்​பாடு, உள்​கட்​டமைப்பு வசதி​கள் குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய தமிழக அரசுக்​கும், சென்னை உயர் நீதி​மன்ற பதிவுத் துறைக்​கும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

கடந்த 2025 செப்​டம்​பரில் திரு​வண்​ணா​மலை கோயிலுக்கு வந்த ஆந்​தி​ராவைச் சேர்ந்த இளம்​பெண்ணை திரு​வண்​ணா​மலை கிழக்கு காவல் நிலைய காவலர்​கள் சுந்​தர், சுரேஷ் ராஜ் ஆகியோர் பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதுதொடர்​பாக மகளிர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். இதையடுத்​து, 2 காவலர்​களும் பணிநீக்​கம் செய்​யப்​பட்​டனர். திரு​வண்​ணா​மலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள இந்த வழக்​கில், கடந்த நவம்​பர் மாதம் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த நிலை​யில், பாதிக்​கப்​பட்ட இளம்​பெண் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், “குழந்​தைகள், பெண்​களுக்கு எதி​ரான பாலியல் வன்​கொடுமை வழக்​கு​களை, சட்​டப்​படி 2 மாதங்​களில் முடிக்க சிறப்பு நீதி​மன்​றங்​களுக்கு உத்​தர​விட வேண்​டும். தற்​போது மாநிலம் முழு​வதும் எத்​தனை பாலியல் வன்​கொடுமை வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ளன என்​பது குறித்த விவரங்​களை சமர்ப்​பிக்க உத்​தர​விட வேண்​டும்” என்​று கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசா​ரணைக்கு வந்​த​போது, இதுதொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய அரசுத் தரப்​பில் அவகாசம் கோரப்​பட்​டது. இந்​நிலை​யில், தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் கூறிய​தாவது: ஆந்​திர இளம்​பெண் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டது தொடர்​பான வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி, குற்​றம்​சாட்​டப்​பட்ட 2 போலீ​ஸாரும் தாக்​கல் செய்த மனுக்​கள் கடந்த ஜூன் 4-ம் தேதிதள்​ளு​படி செய்​யப்​பட்​டு​விட்​டன.

ஜூன் 24 முதல் சாட்சி விசா​ரணை தொடங்க உள்​ளது. விசா​ரணையை ஜூலை 31-க்​குள் முடிக்​க உயர் நீதிமன்றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டுள்​ளது. போக்சோ மற்​றும் பெண்​களுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​ களை விரைந்து விசா​ரிக்​கும் வகை​யில் விரி​வான வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்​க 2 வார காலம் அவகாசம் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: ஆந்​திர இளம்​பெண் பாலியல் வன்​கொடுமை வழக்கை திரு​வண்​ணா​மலை மகளிர் நீதி​மன்​றம் விரைந்து விசா​ரிக்க வேண்​டும். குழந்​தைகள், சிறார்​களுக்கு எதி​ரான பாலியல் வழக்​கு​களை விசா​ரிக்​கும் போக்சோ சிறப்பு நீதி​மன்​றங்​கள் தமிழகத்​தில் எத்​தனை உள்​ளன, இன்​னும் எந்​தெந்த மாவட்​டங்​களில் போக்சோ சிறப்பு நீதி​மன்​றங்​கள் இல்​லை, போக்சோ நீதி​மன்​றங்​களின் தற்​போதைய செயல்​பாடு, உள்​கட்​டமைப்பு வசதி​கள், பாலியல் குற்​றங்​களைத் தடுக்க எடுக்​கப்​படும் நடவடிக்​கைகள் குறித்து தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்​தர​விட்ட நீதிப​திகள், விசா​ரணையை 2 வாரத்​துக்கு தள்​ளிவைத்​தனர்.

போக்சோ நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
வாட்ஸ்அப் சிஇஓ-வாக கிரெட் நிறுவனர் குணால் ஷா நியமனம்: மெட்டா அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in