அரசு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மக்கள் போராடத்தான் செய்வார்கள்: திருப்பத்தூர் நீர்நிலை வழக்கில் ஐகோர்ட் கருத்து

அரசு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மக்கள் போராடத்தான் செய்வார்கள்: திருப்பத்தூர் நீர்நிலை வழக்கில் ஐகோர்ட் கருத்து
Updated on: 
1 min read

மதுரை: அரசு கோரிக்​கையை நிறை​வேற்​றா​விட்​டால் மக்​கள் போராடத்​தான் செய்​வார்​கள் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தெரி​வித்​தது.

சிவகங்கை பர்மா காலனியை சேர்ந்த பாஸ்​கரன், அம்​மாப்​பட்டி சந்​தோஷ்கண்​ணன், நாகப்​பன்​பட்டி ராஜேந்​திரன், முத்​து​சாமி, கல்​யாண சுந்​தரம் ஆகி​யோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருப்​பத்​தூர் தாலு​கா​வில் அம்​மாப்​பட்​டி, நாகப்​பன்​பட்டி கிரா​மங்​களில் நீர்​நிலைப் பகு​தி​கள் ஆக்​கிரமிக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி சின்​னக்​கொசவன் கண்​மாய், பெரிய கொசவன் கண்​மாய் மற்​றும் பொட்ட கண்​மாய்க்கு தண்​ணீர் வரத்து மற்​றும் வெளி​யேற்​றம் சீராகநடை​பெற உரிய நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், பி.பு​கழேந்தி அமர்வு விசா​ரித்​தது. மனு​தா​ரர்​கள் சார்​பில், ‘தனி​யார் நிறு​வனம் 65 ஏக்​கர் நிலத்​தில் சூரிய மின் நிலை​யம் அமைத்​துள்​ளது. இந்த நிலை​யத்​துக்​குச் செல்​வதற்​காக நீர்ப்​பிடிப்​புப் பகு​தியை ஆக்​கிரமித்து மண்​பாதை அமைத்​துள்​ளனர்.

இப்​பாதை​யின் அடி​யில் சிமென்ட் குழாய்​களைப் பதித்​துள்​ளனர். இதற்கு அதி​காரி​களிடம் எந்த அனு​ம​தி​யும் பெற​வில்​லை. இந்த ஆக்​கிரமிப்​புக்கு எதி​ராக பொது​மக்​கள் போராட்​டம் நடத்​தினர். இதனால் மனு​தா​ரர்​களை போலீ​ஸார் குற்ற வழக்​கில் கைது செய்​தனர். எனவே, நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற உத்​தர​விட வேண்​டும்’ எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: சூரிய சக்தி மின் நிலை​யம் அமைத்​துள்ள நிறு​வனம் அரசிடம் அனு​மதி பெறாமல் கண்​மாய் கரை​யில் குழாய்​களைப் பதித்​துள்​ளது. இதனால் அரசு நிர்​வாகத்​திடம் நடவடிக்கை எடுக்க மக்​கள் முறை​யிட்​டனர். நடவடிக்கை எடுக்​காத நிலை​யில் மக்​களே அவற்றை அகற்​றி​யுள்​ளனர். இந்​தச் செயலை நியாயப்​படுத்த முடி​யாதது​தான், ஆனால், மக்​கள் எவ்​வளவு காலம் காத்​திருக்க முடி​யும்? அரசு கோரிக்​கையை நிறை​வேற்​றா​விட்​டால் மக்​கள் போராடத்​தான் செய்​வார்​கள்.

அதி​கார இயந்​திரம் தோல்​வியடைந்து மக்​கள் தாங்​களாகவே செயல்​படும் போது எப்​படி குறை​கூற முடி​யும்? கைது செய்​யப்​பட்ட இரு​வரை​யும் தொடர்ந்து சிறை​யில் வைத்​திருப்​பது நியாயமற்​றது. சட்​டத்தை மக்​கள் தங்​கள் கையில் எடுத்​திருக்​கலாம். ஆனால், சட்​ட​விரோத​மாக நிறு​வப்​பட்​டதைத்​தான் சேதப்​படுத்​தினர் என்​பதை மறுக்​கக் கூடாது.

எனவே, சிவகங்கை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் செப். 12-ம் தேதி (இன்​று) காலை 11 மணிக்கு சிறப்பு அமர்வு நடத்தி நடராஜன், சேவியர் கென்​னடி ஆகி​யோரின் ஜாமீன் மனுக்​களை விசா​ரித்து தீர்​வு​காண வேண்​டும். இந்த மனு அன்​றைய தினம் மாலை மீண்​டும் விசா​ரணைக்கு எடுக்​கப்​படும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தரவில் கூறியுள்​ளனர்​.

அரசு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மக்கள் போராடத்தான் செய்வார்கள்: திருப்பத்தூர் நீர்நிலை வழக்கில் ஐகோர்ட் கருத்து
ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு: 11 இந்தியர்கள் உட்பட 300 பேர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in