கோயில் சொத்துகளில் முறைகேடு செய்யும் அதிகாரிகள்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு | கோப்புப் படம்
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு | கோப்புப் படம்
Updated on: 
1 min read

மதுரை: நீதிமன்றம் மீது பயம் இல்லாத அதிகாரிகள், கோயில் சொத்துகளில் முறைகேடு செய்ய ஆரம்பித்து விட்டனர் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் பாதுகாக்க கோரி திருத்தொண்டர் சபை அமைப்பின் நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘கோயில் சொத்துகளில் வாடகைக்கு எடுத்து வணிகம் செய்யும் நபர்களுக்கு எப்படி வாடகை செலுத்தாமல் இருக்க மனம் வருகிறது. அதிகாரிகளும் தற்போது கோயில் சொத்துகளில் முறைகேடு செய்யத் தொடங்கிவிட்டனர்.

அவர்களே ஒருவரை வாடகைக்கு அமர்த்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முன்பெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும், தற்போது அந்த பயம் அவர்களுக்கு இல்லை.

ஏற்கெனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மாநிலம் முழுவதும் கோயில் சொத்துகளை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு | கோப்புப் படம்
மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in