டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஐகோர்ட் அவகாசம்

சென்னை உயர் நீதி​மன்​றம்

சென்னை உயர் நீதி​மன்​றம்

Updated on
1 min read

சென்னை: அ​தி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணிக்கு எதி​ரான டெண்​டர் முறை​கேடு வழக்​கில் 2 ஐஏஎஸ் அதி​காரி​கள் மீது வழக்கு தொடரு​வதற்​கான நடை​முறையை 2 மாதங்​களில் முடிக்​கு​மாறு மத்​திய அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை, கோவை மாநக​ராட்சி டெண்​டர்​களில் முறை​கேடு செய்​த​தாக அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி. வேலுமணிக்கு எதி​ரான நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு, நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்பு நிலு​வை​யில் உள்​ளது.

கடந்த முறை இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது, டெண்​டர் முறை​கேடு தொடர்​பாக ஐஏஎஸ் அதி​காரி​கள் கந்​த​சாமி, விஜய கார்த்​தி​கேயனுக்கு எதி​ராக வழக்கு தொடர அனு​மதி கோரியவிவ​காரத்​தில் மத்​திய அரசுக்கு விளக்​கம் அளித்து ஜூலை 22-ம் தேதி கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக மத்​திய பணி​யாளர் துறை அதி​காரி ஆஜராகி விளக்​கம் அளிக்க நீதிபதி உத்​தர​விட்​டார்.

அதன்​படி, நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது காணொலி வாயி​லாக ஆஜரான மத்​திய பணி​யாளர் துறை இணைச் செயலர் சுஷீல்​கு​மார் பாட்​டீலிடம், ‘‘குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள 2 ஐஏஎஸ் அதி​காரி​கள் மீது வழக்கு தொடர அனு​மதி வழங்க இவ்​வளவு தாமதம் செய்​வது ஏன்​?’’ என நீதிபதி கேள்வி எழுப்​பி​னார்.

அதற்கு சுஷீல்​கு​மார், ‘‘வழக்கு தொடர்​பான ஆவணங்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் நிலு​வை​யில் உள்​ளன. அவற்றை ஆய்வு செய்ய அவகாசம் தேவை. அந்த ஆவணங்​கள் மத்​திய ஊழல் கண்​காணிப்பு ஆணை​யத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன. ஆணை​யம் அளிக்​கும் பதில் அடுத்த வாரம் கிடைக்​கும். அதன்​பிறகு அவை பிரதமர் அலு​வல​கத்​துக்கு அனுப்​பப்​படும். ஐஏஎஸ் அதி​காரி​கள் மீது வழக்கு தொடர அனு​மதி வழங்​கும் அதி​காரம் பிரதமர் அலு​வல​கத்​துக்கே உள்​ளது. இந்த நடை​முறை​கள் முடிய 2 மாதங்​கள் ஆகும்’’ என்​றார்.

இதையடுத்து நீதிப​தி, ‘‘இதுதொடர்​பாக கடந்த 2025 நவம்​பர் முதல் இது​வரை மேற்​கொள்​ளப்​பட்ட நடை​முறை​களை விளக்கி பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்ய வேண்​டும். 2 அதி​காரி​களுக்கு எதி​ராக வழக்கு தொடர அனு​மதி வழங்​கும் நடை​முறையை 2 மாதங்​களில் முடித்​து, அதுகுறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்​டும்’’ என்று மத்​திய அரசுக்கு உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை நவ.12-க்​கு தள்​ளி வைத்​தார்​.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதி​மன்​றம்</p></div>
காமராசர் காலை உணவுத் திட்டம் செப்.22-ல் விரிவாக்கம்: சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in