கோயில் வகைப்பாடு பட்டியல் தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்க 3 வாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் வகைப்பாடு பட்டியல் தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்க 3 வாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
1 min read

மதுரை: தமிழகத்​தில் உள்ள கோயில்​கள் வகைப்​பாடு தொடர்​பான வரைவுப் பட்​டியல் குறித்து பொது​மக்​கள் ஆட்​சேபனைகளை தெரி​விக்க 3 வாரம் அவகாசம் வழங்கி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

நெல்லை மாவட்​டம் அம்​பாசமுத்​திரத்​தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியருப்​ப​தாவது: தமிழகத்​தில் இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் நடைமுறை​யில் இருந்து வரும் பூஜைகள், வழிபாட்டு முறைகள் ஆகம விதி​களின்​படி நடை​பெறுகிறதா அல்​லது தொன்​றுதொட்டு வரும் மரபு மற்​றும் பழக்​கவழக்​கங்​களின் அடிப்​படை​யில் நடை​பெறுகிறதா என்ற அடிப்​படை​யில் கோயில்​களை வகைப்​பாடு செய்ய குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தக் குழு முதல்​கட்ட பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளது. அதில் 7,461 கோயில்​கள் மட்​டுமே ஆகம விதி​களின்​படி பூஜைகள் நடை​பெறும் கோயில்​களாகவும், 27,150 கோயில்​கள் ஆகம முறையை பின்​பற்​றாமல் மரபு அல்​லது பழக்​கவழக்​கத்​தின் அடிப்​படை​யில் பூஜைகள் நடை​பெறும் கோயில்​களாகவும் வகைப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இப்​பட்​டியலுக்கு பொது​மக்​களிடம் இருந்து ஆட்​சேபனைகள் மற்​றும் கருத்​துகள் கோரப்​பட்​டுள்​ளன. கோயில்​களை வகைப்​படுத்த அமைக்​கப்​பட்​டுள்ள குழு​வில் ஆகம வல்​லுநர்​கள் இடம்​பெற உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு பிறப்​பித்த உத்​தரவு: உயர் நீதி​மன்ற முதன்மை அமர்வு தமிழகத்​தில் உள்ள ஆகம கோயில்​களை கண்​டறிய 5 பேர் கொண்ட குழு அமைக்க 2022-ல் உத்​தர​விட்​டது. ஒரு கோயில் குறிப்​பிட்ட ஆகம விதி​களின்​படி கட்​டப்​பட்​ட​தாக கண்​டறியப்​பட்​டால், அங்கு அர்ச்​சகர்​களை நியமிக்​கும் முறை அதற்​கேற்ப அமையும் என்​ப​தால், கோயில் வகைப்​பாடு மிக முக்​கிய​மானதாகும். கோயி​லின் ஆகம தன்​மையைப் பற்றி அதன் அனைத்து அம்​சங்​களை​யும் முழு​மையாக ஆய்வு செய்​யாமல், எந்த முடிவுக்​கும் வர முடி​யாது.

அரசு தரப்​பில் தற்​போது வரைவுப் பட்​டியல் மட்​டுமே வெளி​யிட்​டிருப்​ப​தாகவும், ஆட்​சேபனைகள் பெறப்​பட்ட பிறகு அவற்றை குழு ஆய்வு செய்து சட்​டப்​படி தகுந்த தீர்வு காணப்​படும். தேவைப்​படும்​போது ஆகம வல்​லுநர்​களிடம் ஆலோ​சனை பெறப்​படும் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, கோயில் வகைப்​பாட்டு வரைவுப் பட்​டியல் தொடர்​பாக பொது​மக்​கள் ஆட்​சேபனைகளை தெரி​விக்க 3 வார அவகாசம் வழங்​கப்​படு​கிறது. அனைத்து தரப்​பினரிடம் இருந்​தும் ஆட்​சேபனைகளை பெறும் வகை​யில் ஊடகங்​களில் அறி​விப்பு வெளி​யிடப்​பட வேண்​டும். ஆட்​சேபனைகளை நிவர்த்தி செய்​யும் உத்​தரவுடன், அது தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​பட்ட ஆகம வல்​லுநர்​களின் கருத்​தையும் இணைக்க வேண்​டும். மனு முடித்து வைக்​கப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

கோயில் வகைப்பாடு பட்டியல் தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்க 3 வாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
“யாரையும் போலீஸ் காப்பாற்றப் போவதில்லை, பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரேயாவது கொடுங்கள்” - தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

X