பழநி நில மோசடியை சிபிஐ விசாரிக்க கோரி புதிய மனு: சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பழநி நில மோசடியை சிபிஐ விசாரிக்க கோரி புதிய மனு: சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: பழநி கோயில் நில மோசடி வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரிய வழக்​கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

பழநி கோயிலுக்கு சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள சொத்து தனி​யார் பெயருக்கு மோசடி​யாக பத்​திரப்​ப​திவு செய்த வழக்கை சிபிசிஐடி விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கின் விசா​ரணையை சிபிஐக்கு மாற்​றக்​கோரி பழநி திமுக நகராட்சி தலை​வர் உமாமகேஸ்​வரி, அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ வேணுகோ​பால், தண்​டா​யுத​பாணி சுவாமிகள் மடத்​தின் அறங்​காவலர் அன்​னபூரணி சிவகு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர்​கள் சார்​பில், இந்த மோசடி​யில் அரசு அதி​காரி​களுக்கு தொடர்​புள்​ளது. எனவே சிபிஐ விசா​ரித்​தால்​தான் முழு உண்​மை​யை​யும் வெளிக்​கொண்​டுவர முடி​யும் என்​றனர்.

அரசு தரப்​பில், இந்த மனுக்​களை விசா​ரிக்​கும் முன்பு வழக்கு தொடர்ந்​தவர்​களுக்கு வழக்கு தொடர தகுதி உள்​ள​தா என்​பதை உறு​தி​செய்ய வேண்​டும். பழநி நகராட்சி தலை​வர் எந்த அடிப்​படை​யில் இந்த வழக்கை தாக்​கல் செய்​தார்? பழநி மடத்​தின் அறங்​காவலர் என தன்னை அடை​யாளப்​படுத்​திக் கொள்​ளும் நபர் எப்​படி இந்த வழக்கை தாக்​கல் செய்​தார்? இதில் பல்​வேறு முரண்​பாடு​கள் உள்ளன எனக் கூறப்​பட்​டது.

கோயில் நிர்​வாகம் தரப்​பில், கோயில் நிர்​வாகத்தை வழக்​கில் எதிர்​மனு​தா​ர​ராக சேர்க்​க​வில்​லை. அன்​னபூரணி சிவக்​கு​மார் மடத்​தின் அறங்​காவலர் அல்ல. அவர் கோயில் அறங்​காவலர் குழு உறுப்​பினர்​களில் ஒரு​வர். மனு​வில் தவறாக குறிப்​பிட்​டுள்​ளார் எனக் கூறப்​பட்​டது. பின்​னர் நீதிப​தி​கள், பழநி நில மோசடி வழக்கு விசா​ரணை தற்​போது எந்த நிலை​யில் உள்​ளது? என்​பது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​தால், அதன் அடிப்​படை​யில் விசா​ரணையைத் தொடரலாம் என்​றனர்.

பழநி அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ வேணுகோ​பாலின் வழக்​கறிஞர் மாரீஸ்​கு​மார் வாதிடு​கை​யில், மனு​தா​ரர் 2004 முதல் 2006 வரை பழநி கோயில் அறங்​காவலர் குழு உறுப்​பினராக இருந்துள்​ளார். 2011-2016 ஆண்​டுகளில் எம்​எல்​ஏ​வாக இருந்​துள்​ளார். அவருக்கு வழக்கு தொடர உரிமை உள்​ளது என்​றார். இதையடுத்து நீதிப​தி​கள், வழக்​கின் தற்​போதைய நிலை குறித்து சிபிசிஐடி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். வி​சா​ரணை ஆகஸ்ட் 5-க்கு தள்​ளி வைக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டனர்​.

பழநி நில மோசடியை சிபிஐ விசாரிக்க கோரி புதிய மனு: சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
“வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் தப்ப முடியாது” - புதிய செல்ஃபி வீடியோவில் பிரதமர் மோடி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in