திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

திருப்பரங்குன்றம் மலை |கோப்புப் படம்

திருப்பரங்குன்றம் மலை |கோப்புப் படம்

Updated on
1 min read

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் மலையை மீண்​டும் அளவீடு செய்ய உயர் நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த நீதி​மன்ற அவம​திப்பு மனு: திருப்​பரங்​குன்​றம் மலைப்​பகுதி முழு​வதை​யும் தொல்​லியல் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் கொண்​டு​வர​வும், தொல்​லியல் துறை​யிடம் அனு​மதி பெற்ற பிறகே திருப்​பரங்​குன்​றம் மலை மீது ஏற அனு​ம​திக்க வேண்​டும் என்றும் வழக்கு தொடர்ந்​தேன்.

இதை விசா​ரித்த நீதிப​தி​கள், என் மனுவை அதி​காரி​கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்​டும் என உத்​தர​விட்​டார். இருப்​பினும் என் மனு மீது நடவடிக்கை எடுக்​காத அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், எஸ்​.ஸ்ரீமதி அமர்வு விசா​ரித்​தது. அரசு தரப்​பில், திருப்​பரங்​குன்​றம் மலையை அளவீடு செய்​த​தில், சில இடங்​களில் முரண்​பாடு​கள் இருப்​பது போல் தோன்​றுகிறது. எனவே மலைப்​பகு​தியை மீண்​டும் அளவீடு செய்ய வேண்​டும். சுமார் 5 ஏக்​கர் பரப்​பளவு பகு​தியை அளவீடு செய்ய வேண்​டும். அதற்கு 4 வாரங்​கள் கால அவகாசம் வேண்​டும் எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள், திருப்​பரங்​குன்​றம் மலையை முழு​வது​மாக அளவிடும் பணி 4 வாரங்​களுக்​குள் முடிக்​கப்​படும் என அரசு தரப்​பில் உறுதி அளிக்​கப்​ பட்​டுள்​ளது. அந்த அறிக்​கை​யில் லண்​டன் பிரிவியு கவுன்​சிலின் உத்​தர​வுக்கு பிறகு மலை மீது ஏதேனும் விரி​வாக்​கப் பணி​கள் நடை​பெற்​றிருந்​தால், அது தொடர்​பான விவரங்​களை​யும் அறிக்​கை​யில் குறிப்​பிட வேண்​டும் என உத்​தர​விட்டு வி​சா​ரணையை ஆகஸ்ட்​ 14-க்​கு தள்​ளி வைத்​தனர்​.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றம் மலை |கோப்புப் படம்</p></div>
கோரப்படாத இபிஎஃப் கணக்குகளில் முடங்கிக் கிடக்கும் ரூ.9,330 கோடி: ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in