கோயில்கள் பராமரிப்புக்கு ரூ.36 கோடி அரசு மானியம்: 20 பேருக்கு ‘கைவினைப் பொக்கிஷம்’, ‘பூம்புகார்’ விருதுகள்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், கைத்தறி, கைவினைப் பொருள் கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது.படம்: எஸ்.சத்தியசீலன்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், கைத்தறி, கைவினைப் பொருள் கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது.படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
1 min read

சென்னை: அறநிலை​யத் துறை சார்​பில் கன்​னி​யாகுமரி, புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர் அரண்​மனை தேவஸ்​தான கோயில்​களின் நிர்​வாகம், பராமரிப்பு செல​வுக்​கான அரசு மானியத்தை சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகளிடம் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று வழங்​கி​னார். அந்த வகையில், உயர்த்​தப்​பட்ட அரசு மானி​யம் ரூ.18 கோடிக்​கான காசோலையை சுசீந்​திரம் -

கன்​னி​யாகுமரி தேவஸ்​தான கோயில்​கள் இணை ஆணை​யர் ஜான்​சி​ராணி​யிட​மும், அரசு மானி​யம் ரூ.10 கோடிக்​கான காசோலையை புதுக்​கோட்டை மாவட்ட கோயில்​களின் தக்​கார் ரஞ்​சி​தா​விட​மும், அரசு மானி​யம் ரூ.8 கோடிக்​கான காசோலையை தஞ்​சாவூர் அரண்​மனை தேவஸ்​தான பரம்​பரை அறங்​காவலர் சி.​பா​பாஜி ராஜா போன்​ஸ்​லே​விட​மும் வழங்​கி​னார்.

முக்​தி​நாத் ஆன்​மிகப் பயணம் மேற்​கொண்ட 389 பக்​தர்களுக்கு அரசு மானி​யம் தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.1.17 கோடி வழங்​கும் அடை​யாள​மாக 10 பேருக்கு காசோலைகளை வழங்​கி​னார்.

கைவினைப் பொருள் கண்காட்சி: சென்னை கலை​வாணர் அரங்​கில், தமிழகத்​தின் பாரம்​பரியமிக்க கைவினைப் பொருட்​கள் கண்​காட்சி மற்​றும் கருத்​தரங்​கத்தை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார்.

கைவினைத் தொழிலுக்​காக தங்​கள் வாழ்க்​கையை அர்ப்​பணித்​துக் கொண்ட 65 வயதுக்கு மேற்​பட்ட 10 சிறந்த கைவினைஞர்​களுக்கு ‘வாழும் கைவினைப் பொக்​கிஷம்’ விருதுகளை​ வழங்கினார். அதன்​படி, 2025-26-ம் ஆண்​டுக்​கான ‘வாழும் கைவினைப் பொக்​கிஷம்’ விருதுகளை நாகை

சி.குளுந்​தான் (பித்​தளை கலைப் பொருட்​கள்), தஞ்​சாவூர் ந.ராஜேந்​திரன் (இசைக்​கரு​வி- வீணை), கோ.ரெத்​தினம் (தஞ்​சாவூர் கலைத்தட்​டு), சென்னை சோ.கோ​பால் (இசைக்​கருவி –சீர்​யாழ்) மற்​றும் சி.இந்​திரா (தஞ்​சாவூர் ஓவி​யம்), செங்​கல்​பட்டு கோ.சுப்​ரமணி​யம் (கற்​சிற்​பம்) மற்​றும் தி.​திரு​மூர்த்தி (மரச்​சிற்​பம்), சிவகங்கை க.பால்​ராஜ் (மரச்​சிற்ப உட்​ப​திப்​பு), கள்​ளக்​குறிச்சி எஸ்​.எஸ். சங்​கீதம் (மரச்​சிற்​பம்), கன்​னி​யா குமரி கி.சுப்​பிரமணி​யன் (கோ​யில் நகைகள்) ஆகியோ​ருக்கு தலா ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை, 8 கிராம் தாமிரப் பட்​ட​யம், தகு​திச் சான்​றுகளை வழங்​கி​னார்.

கைத்​திறத் தொழிலின் பங்​களிப்​புக்​கான ‘பூம்​பு​கார்’ மாநில விருதுகள் தஞ்சை க.வெங்​கடேஷ் (பஞ்​சலோக சிற்​பம்), சி.சங்​கீதா (தஞ்​சாவூர் ஓவி​யம்) மற்​றும் அ.பாபு (தஞ்​சாவூர் கலைத்​தட்​டு), விழுப்​புரம் கு.ரீடா (உலோக தகட்டு வேலை) மற்​றும் மு.ஷ​பானா (சுடு​களிமண் சிற்​பம்), மயி​லாடு​துறை சே.​முரு​கன் (மரச்​சிற்​பம்), செங்​கல்​பட்டு அ.ராஜ் (கற்​சிற்​பம்), திருநெல்​வேலி அ.கவ்​வாபீவி (பாய் நெசவு) கன்​னி​யாகுமரி தே.செலின் மேரி (சித்​திரத்​தையல்) மற்​றும் சின்ன காஞ்​சிபுரம் மு.கு​மார் (காகிதக்​கூழ் பொம்​மை​கள்) ஆகிய 10 பேருக்​கும் தலா ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்​கப் பதக்​கம், தாமிரப் பட்​ட​யம், சான்​றிதழ்​களை முதல்​வர்​ வழங்​கி​னார்​.

<div class="paragraphs"><p>தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், கைத்தறி, கைவினைப் பொருள் கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது.படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
கலைவாணர் அரங்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in