

கோப்புப் படம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள அத்திக்கடை பகுதியில் பெட்டிக்கடைநடத்தி வருபவர் பாஸ்கர். இவர் குட்கா விற்பனை செய்ததாக கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், குடவாசலில் பணியாற்றும் தனிப்படை தலைமைக் காவலர் மனோகரன், நன்னிலம் காவல் நிலைய தலைமைக் காவலர் பாரதிராஜா ஆகியோருக்கு, கடந்த 2 ஆண்டுகளாக பலமுறை பணம் அனுப்பியிருந்தது தெரியவந்தது. மேலும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவருக்கும் பணம் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து, தலைமைக் காவலர்கள் மனோகரன், பாரதிராஜா ஆகிய இருவரையும் பணியிடைநீக்கம் செய்து எஸ்பி சதீஷ்குமார் நேற்று உத்தரவிட்டார். மேலும், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு பரிந்துரை செய்தார்.