குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவர்கள்: கார்கே பேச்சுக்கு குஜராத் முதல்வர் கண்டனம்

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
Updated on
1 min read

இடுக்கி: கேரள சட்​டப்​பேரவை தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் கல்​வியறிவற்ற குஜ​ராத்​தி​கள் என்று காங்​கிரஸ் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே பேசி​யது பெரும் அரசி​யல் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

கேரள சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி சார்​பில் பிரச்​சார கூட்​டம் இடுக்​கி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பங்​கேற்று பேசுகை​யில், “கேரள மக்​களைத் தவறாக வழிநடத்​தாதீர்​கள், அவர்​கள் மிக​வும் புத்​தி​சாலிகள், படித்​தவர்​கள். பிரதமர் மோடி, பின​ராயி விஜயன் இரு​வரும் குஜ​ராத்​தி​லும் மற்ற இடங்​களி​லும் கல்​வியறி​வில்​லாத மக்​களை ஏமாற்​றலாம். ஆனால் கேரள மக்​களை உங்​களால் ஏமாற்ற முடி​யாது" என்​றார்.

கார்​கே​வின் இந்​தப் பேச்சு சமூக வலை​தளங்​களில் வைரலானதை தொடர்ந்து அதற்கு கடும் விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன. குஜ​ராத் முதல்​வர் பூபேந்​திர படேல் 'எக்​ஸ்' தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “குஜ​ராத் மக்​கள் குறித்து காங்​கிரஸ் தலை​வர் கார்கே கூறிய கருத்​துகள் மிக​வும் ஆட்​சேபத்​துக்​குரியவை மற்​றும் துர​திர்​ஷ்ட​வச​மானவை. இத்​தகைய கருத்​துகள் குஜ​ராத்​தின் 6 கோடி மக்​களை அவம​திப்​பது மட்​டுமல்​லாமல், மகாத்மா காந்தி மற்​றும் சர்​தார் படேலின் புனித மண்​ணை​யும் அவம​திப்​ப​தாகும்.

தேசக் கட்​டு​மானம், வளர்ச்சி மற்​றும் ஒற்​றுமை​யில் குஜ​ராத் எப்​போதும் முன்​னணி​யில் இருந்து வரு​கிறது, எதிர்​காலத்​தி​லும் அது தொடரும். இத்​தகைய அறிக்​கைகள் காங்​கிரஸ் கட்​சி​யின் குறுகிய மனப்​பான்​மையை வெளிப்​படுத்​துகின்​றன” என்று அவர் கூறி​யுள்​ளார். கார்கே கருத்​துக்கு குஜ​ராத் துணை முதல்​வர் ஹர்ஷ் சங்​க​வி​யும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். "காங்​கிரஸ், குஜ​ராத் மக்​களை குறிவைப்​பது அவர்​கள் மீது அக்​கட்சி கொண்​டுள்ள ஆழமான வெறுப்​பையே காட்​டு​கிறது" என்​று அவர்​ கூறி​யுள்​ளார்​.

மல்லிகார்ஜுன கார்கே
“காங்கிரஸ் ​ஆட்சி புதுச்சேரியை பின்னோக்கி தள்ளிவிட்டது” - அமித் ஷா குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in