வடகிழக்கு பருவமழை எதிரொலி: பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டுதல்

வடகிழக்கு பருவமழை எதிரொலி: பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டுதல்
Updated on: 
1 min read

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழையை தொடர்ந்து பள்​ளி​களில் மேற்​கொள்ள வேண்​டிய பாது​காப்பு நட​வடிக்​கைகள் தொடர்​பான வழிகாட்டு நெறி​முறைகளை பள்​ளிக் கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக பள்​ளிக்​கல்வி இயக்​குநர் (பொறுப்பு) ந.லதா, தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ், தனியார் பள்​ளி​கள் இயக்​குநர் சுகன்யா ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதி​காரி​கள் மற்​றும் மாவட்ட கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பியுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கி​யிருப்​ப​தால் பள்​ளி​களில் அனைத்து கட்​டிடங்​களின் மேற்​கூரைகளின் உறுதித்​தன்​மையை முழு​மையாக ஆய்வு செய்​வதுடன் மொட்டை மாடி மற்​றும் மேற்​கூரைகளில் உள்ள மழைநீர் வடிகால் குழாய்​களில் அடைப்​பு​கள் இருந்​தால் அவற்றை உடனடி​யாக நீக்​கவேண்​டும்.

சேதமடைந்த அல்​லது விரிசல் விழுந்த சுற்​றுச்​சுவர்​கள்​அருகே மாணவர்​கள் செல்​லாதவாறு முள்​வேலிகள், தடுப்​பு​கள் அல்​லது எச்​சரிக்கை பல​கைகள் வைக்க வேண்​டும்.

மிகவும் பழுதடைந்த கட்​டிடங்​களை உள்​ளாட்சி அமைப்​பு​களின் ஒப்​புதல் பெற்று உடனடி​யாக இடித்து அப்​புறப்​படுத்த வேண்​டும்.

கட்​டு​மானப் பணிக்​காக தோண்​டப்​படும் ஆழமான குழிகள் மற்​றும் பள்​ளங்​களை சுற்றி தடுப்​பு​கள் அமைக்க வேண்​டும்.

திறந்​தவெளி கிணறுகள், தரைமட்ட நீர்த்​தேக்க தொட்​டிகள் மற்​றும் கழிவுநீர் தொட்​டிகளை கான்​கிரீட் அல்​லது இரும்பு மூடிகளைக் கொண்டு மூடி பூட்டி வைக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறியுள்​ளனர்.

வடகிழக்கு பருவமழை எதிரொலி: பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டுதல்
சென்னையில் பால் தடையின்றி விநியோகம்: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in