அரசு உருவாக்கிய கட்சி கூட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் ஒவ்வொன்றையும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது: ஐகோர்ட் கருத்து

அரசு உருவாக்கிய கட்சி கூட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் ஒவ்வொன்றையும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது: ஐகோர்ட் கருத்து
Updated on
1 min read

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் துயர சம்​பவத்​தைத் தொடர்ந்து அரசி​யல் கட்​சிகள் ரோடு ஷோக்​களுக்கு வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்க உத்​தர​விடக் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தன.

இந்த வழக்​கு​கள் கடந்த முறை விசா​ரணைக்கு வந்​த​ போது தமிழக அரசின் வரைவு வழி​காட்டு நெறிமுறை தாக்​கல் செய்​யப்​பட்டது. இந்த வழக்​கு​கள் தலைமை நீதிபதி எம்​.எம் ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது அதி​முக தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விஜய நாராயண், ‘‘மத வழி​பாட்டு தலங்​களில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளுக்​கும், தனி வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்க வேண்டும். கூட்​டங்​களுக்​கான அனு​மதி கோரும் விண்​ணப்​பங்களை நிராகரிக்​கும்​போது அதற்கு உரிய காரணங்​களை தெரிவிக்க வேண்​டும்’’ என்பன உள்​ளிட்ட ஆட்​சேபங்​களை தெரி​வித்​தார்.

தவெக தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பாலசுப்​பிரமணி​யன், ‘‘அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களின் விபரங்​களை இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். அந்த இடங்களில் எத்​தனை பேர் நிற்​கலாம்? எத்​தனை பேர் அமரலாம் என்ற விவரங்​களை​யும் தெரிவிக்க வேண்​டும்’’ என்றார்.

தமிழக அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ரவீந்​திரன், ‘‘அனைத்து கட்​சிகளின் ஆலோ​சனைக்​குப் பிறகு இந்த வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்​கப்​பட்​டுள்​ளன. அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​கள் விவரங்​களை இணை​யதளத்​தில் பதிவேற்​றப்​பட்​டுள்​ளது’’ என விளக்​கம் அளித்​தார்.

தேர்வு எழுதுவதுபோல்… இதையடுத்​து, ‘‘தமிழக அரசின் இந்த வழி​காட்டு நெறி​முறைகளை பார்க்​கும்​போது, ரோடு ஷோக்​களுக்கு அனு​மதி பெறு​வது என்​பது தேர்வு எழுதி வெற்றி பெற வேண்​டிய நிலை போல் உள்​ளது. விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​ட​தா? ஏற்​கப்​பட்​ட​தா? என முன்​கூட்​டியே தெரிவிக்க வேண்​டும். ஒவ்​வொரு பிரிவை​யும் எதிர்த்து வழக்கு தொடரும் வகை​யில் உள்​ளது’’ என்று கருத்து தெரி​வித்த நீதிப​தி​கள், வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்​ளி​வைத்​தனர்​.

அரசு உருவாக்கிய கட்சி கூட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் ஒவ்வொன்றையும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது: ஐகோர்ட் கருத்து
மக்கள் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in