மக்கள் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

மக்கள் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்து வரும் நிலை​யில், வானிலை நில​வரம், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து சென்னை தலை​மைச் செயல​கத்​தில் அமைச்​சர், அதி​காரி​களு​டன் முதல்​வர் ஸ்டா​லின் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

மேலும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யக் கூட்​ட​மும் நடை​பெற்​றது. இதில், நிகழ்​நேர பேரிடர் கண்​காணிப்பு கருவி​கள், புயல் சீற்ற மாதிரி, மாநக​ராட்​சிகளுக்​கான வெப்ப அலை செயல்​பாட்டு திட்​டம், சென்னை நிகழ்​நேர வெள்ள முன்​னறி​விப்பு திட்​டம், தமிழ்​நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை​யின் ஒருங்​கிணைந்த வெள்ள கண்​காணிப்பு மையம், அவசர​கால செயல்​பாட்டு மையம், மக்​களுக்​கான டி.என்.அலர்ட் (TN Alert) செயலி, அதி​காரி​களுக்​ கான டி.என்​.ஸ்​மார்ட் 2.0 (TN Smart 2.0) இணை​யதளம் ஆகிய​வற்​றின் செயல்​பாடு​கள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. தமிழ்​நாடு பேரிடர் மேலாண்மை திட்​டம் 2025-க்கு மேலாண்மை ஆணை​யத்​தால் ஒப்​புதலும் வழங்​கப்​பட்​டது.

கடந்த 2021-25-ம் ஆண்​டு​களில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (SDRF) மத்​திய அரசு ஒதுக்​கிய ரூ.5,352 கோடியை​விட தமிழக அரசு கூடு​தலாக ரூ.9,170 கோடி செலவு செய்​துள்ளது. இந்த நிதி ஆண்​டுக்கு மத்​திய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரண நிதி ரூ.826.50 கோடி வர வேண்டி உள்​ளது என்று முதல்​வரிடம் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: மழைக்​காலங்​களில் ஏழை, எளிய மக்​கள்​தான் அதி​கம் பாதிக்கப்​படு​கின்​றனர். அதனால், பேரிடர் மேலாண்​மை​யில் தனி கவனம் செலுத்​தி, இயற்​கைச் சீற்​றங்​களால் ஏற்​படும் பாதிப்​பு​களை பெரு​மளவு குறைக்க அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

தமிழகத்​தில் முதல்​முறை​யாக புதிய தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்​தி, பேரிடர் மேலாண்மை சிறப்​பாக கையாளப்​பட்டு வரு​கிறது. கடந்த 4 ஆண்​டு​களில் ரூ.1,740 கோடி​யில் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. பேரிடர் நிவாரணப் பணி​களுக்கு மத்​திய அரசை​விட அதி​க​மாக நிதி ஒதுக்​கி​யுள்ளோம்.

மக்​களின் பாது​காப்​பில் அக்​கறை கொண்​டு, தொய்​வின்றி இப்​பணி​களை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். பேரிடர் மேலாண்​மைக்கு தேவை​யான நிதியை முறை​யாக ஒதுக்​கி, முறை​யாக பயன்​படுத்​தி, மக்​கள் பயன்​பெறும் வகை​யில் பணி அமைய வேண்​டும்.

சில மாவட்​டங்​களில் நவ.29, 30-ம் தேதி​களில் அதி​க​னமழை பெய்​யும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. எனவே, வருவாய், உள்​ளாட்​சி, காவல், தீயணைப்பு, மீன்​வளம், சுகா​தா​ரம் உள்ளிட்ட அனைத்து துறை​களும் ஒருங்​கிணைந்​து, மக்​கள் பணி​யாற்ற வேண்​டும். தேவை​யான மாவட்​டங்​களுக்கு கண்​காணிப்பு அதி​காரி​களை உடனே அனுப்ப வேண்​டும். மீட்பு, நிவாரண மையங்​களை தயா​ராக வைத்​து, மக்​களுக்கு தேவை​யான அடிப்​படை வசதி​களை முறை​யாக வழங்க ஏற்​பாடு செய்ய வேண்​டும். அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களும் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

வரு​வாய், பேரிடர் மேலாண்​மைத் துறை அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் சாய்​கு​மார் மற்​றும் பல்​வேறு அரசுத்​ துறை​களின்​ செயலர்​கள்​, துறைத்​ தலை​வர்​கள்​ பங்​கேற்​றனர்​.

மக்கள் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in