1,647 மையங்களில் இன்று குரூப்-2 முதல்நிலை தேர்வு: தமிழகம் முழுவதும் 4.90 லட்சம் பேர் எழுதுகின்றனர்

காலை 8.30 மணிக்கு தேர்வுக் கூடத்தில் இருக்க அறிவுறுத்தல்
1,647 மையங்களில் இன்று குரூப்-2 முதல்நிலை தேர்வு: தமிழகம் முழுவதும் 4.90 லட்சம் பேர் எழுதுகின்றனர்
Updated on: 
1 min read

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 1,647 மையங்களில் இன்று நடைபெறுகிறது. 4.90 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தொழிலாளர் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், ஜெயிலர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 43 காலி இடங்​களை​யும், கூட்​டுறவு பால் சங்​கங்​களின் முது​நிலை ஆய்​வாளர், இந்து சமய அறநிலை​யத் துறை தணிக்கை ஆய்​வாளர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், பேரூ​ராட்சி செயல் அலு​வலர் உள்​ளிட்ட குரூப்​-2ஏ பதவி​களில் 803 காலி இடங்​களை​யும் நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்​-2, 2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) கடந்த ஆக.11-ம் தேதி வெளி​யிட்​டது. 3.06 லட்​சம் பெண்​கள், 1.84 லட்​சம் ஆண்​கள், மூன்​றாம் பாலினத்​தவர் 35 பேர் என மொத்​தம் 4.90 லட்​சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி, குரூப்​-2, 2ஏ முதல் ​நிலைத் தேர்வு சென்​னை​யில் 173 மையங்​கள் உட்பட தமி​ழ​கம் முழு​வதும் 1,647 மையங்​களில் இன்று காலை 9.30 மணி முதல் மதி​யம் 12.30 மணி வரை நடை​பெறுகிறது.

அனைத்து மையங்​களி​லும் மாற்​றுத் திற​னாளி​கள் தரை தளத்​தில் தேர்வு எழுத வசதி செய்​யப்​பட்​டுள்​ளது. பார்​வையற்​றோர் தேர்வு எழுத மாற்று நபர் தனி அறை​கள் கொண்ட வசதி​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. தேர்வு நேரம் முடிந்​ததும், மாற்​றுத் திற​னாளி​களுக்கு மட்​டும் கூடு​தலாக ஒரு மணி நேரம் வழங்​கப்​படும்.

முறை​கேடு​கள் நடை​பெறாமல் தடுக்க தீவிர கண்​காணிப்பு நடவடிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. மையங்​களில் போலீஸ் பாது​காப்​புக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தேர்​வர்​கள் மையங்​களுக்கு எளி​தில் செல்​லும் வித​மாக கூடு​தல் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்றன.

ஸ்மார்ட் வாட்ச் அனு​மதி இல்லை

தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்​கும் நிலை​யில், தேர்​வர்​கள் ஒரு மணி நேரம் முன்​ன​தாக காலை 8.30 மணிக்கு தேர்​வுக் கூடத்​தில் இருக்க வேண்​டும். 9 மணிக்கு மேல் வந்​தால் தேர்வு எழுத அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ ளது. தேர்​வர்​கள் சாதாரண கைக்​கடி​காரம் கட்டி வரலாம். ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,647 மையங்களில் இன்று குரூப்-2 முதல்நிலை தேர்வு: தமிழகம் முழுவதும் 4.90 லட்சம் பேர் எழுதுகின்றனர்
முதல்வர் விஜய் நவ.14-ல் அம்பாசமுத்திரம் பயணம்? - சூடுபிடிக்கிறது இடைத்தேர்தல் களம்

X