குரூப்-2 முதன்மைத் தேர்வு 1,082 பேர் எழுதினர்

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது
குரூப்-2 முதன்மைத் தேர்வு 1,082 பேர் எழுதினர்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடை​பெற்ற டிஎன்​பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வை தமிழகம் முழுவதும் 1,082 பேர் எழு​தினர். இதற்​கான தமிழ் தகு​தித்​தாள் தேர்வு மார்ச் 15-ம் தேதி நடை​பெற உள்​ளது.

தமிழகத்தில் சார்​-ப​தி​வாளர், தொழிலா​ளர் உதவி ஆய்​வாளர், தலை​மைச் செயலக உதவி பிரிவு அலு​வலர், இளநிலை வேலை​வாய்ப்பு அலு​வலர், ஃபாரஸ்​டர் உள்​ளிட்ட பதவி​களில் 80 காலி​யிடப் பணியிடங்​களை நிரப்​புவதற்​கான குரூப்-2 மெயின் தேர்வு தமிழகம் முழு​வதும் பல்​வேறு மையங்​களில் நேற்று காலை நடந்​தது. விரி​வாக விடையளிக்​கும் வகை​யில் நடத்​தப்​பட்ட இத்​தேர்வை 1,082 பேர் எழு​தினர்.

சென்​னை​யில் நந்​தனம் அரசு கலைக்​கல்​லூரி, மாநிலக் கல்​லூரி, அரும்​பாக்​கம் டி.ஜி. வைஷ்ணா கல்​லூரி ஆகிய 3 மையங்​களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 364 பேர் தேர்​வெழு​தினர். இவர்​களுக்​கான கட்​டா​யத் தமிழ் மொழித் தகு​தித்​தாள் தேர்வு மார்ச் 15-ம் தேதி நடை​பெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இத்​தேர்வு கடந்த பிப்​.8-ம் தேதி பிற்​பகலிலும், அதே நாளில் காலை குரூப்-2ஏ முதன்​மைத் தேர்​வும் பிற்​பகல் கட்டாய தமிழ் மொழித் தகு​தித்​ தேர்​வும் நடைபெற இருந்தன. ஆனால், காலையில் நடத்தப்பட்ட குரூப்-2ஏ முதன்​மைத் தேர்​வில் சென்னை​யில் ஏற்​பட்ட தேர்வு மைய ஒதுக்​கீடு குளறு​படி காரணமாக குரூப்-2 மற்​றும் குரூப்-2 ஏ முதன்​மைத் தேர்​வு​கள் ரத்து செய்​யப்​பட்டன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

குரூப்-2 முதன்மைத் தேர்வு 1,082 பேர் எழுதினர்
“அதிமுகவை பாஜகவுக்கு விற்று விட்டார் பழனிசாமி” - கோவையில் உதயநிதி பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in