மதுராந்தகம் தொகுதியில் மகுடம் யாருக்கு?

மதுராந்தகம் தொகுதியில் மகுடம் யாருக்கு?
Updated on
2 min read

தமிழக சட்​டப்​பேரவை தொகு​தி​களின் வரிசைப் பட்டியலில் 35-வ​தாக இடம் பெற்​றுள்ள மதுராந்தகம் தொகு​தி, பல்​வேறு முக்​கிய அடை​யாளங்​களை கொண்டுள்​ளது. ஏரி காத்த கோதண்​ட​ராமர் கோயில், ஆட்சீஸ்​வரர் கோயில், மாவட்ட பெரிய ஏரி, வேடந்​தாங்​கல் பறவை​கள் சரணால​யம், மேல்​மரு​வத்​தூர் ஆதிப​ராசக்தி கோயில் என முக்​கிய அடை​யாளங்​கள் உள்​ளன.

இத்​தொகு​தி​யில், கடந்த 1977 முதல் 2011 வரை நடை​பெற்ற 9 சட்​டப்​பேர​வை் தேர்​தல்​களில் திமுக 3 முறை​யும், அதி​முக 4 முறை​யும் மற்​றும் காங்​கிரஸ் ஒரு​முறை வெற்றி பெற்றுள்​ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில் மதுராந்தகம் தொகு​தி​யில் அதிமுகவின் மரகதம் 86,646 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார்.

பொதுமக்கள் கோரிக்கை

மது​ராந்​தகம் நகராட்​சி​யில் பாதாள சாக்​கடை திட்​டம் செயல்​படுத்​தப்​ப​டா​மல் உள்​ள​தால், நகரின் பல்​வேறு தெருக்​களில் கழி​வுநீர் சாலை​யில் வழிந்​தோடுவதால் சுகாதா​ர சீர்​கேடு நில​வு​கிறது.

மேலும், சாலை திட்​டங்​களும் செயல்​படுத்​தப்​ப​டா​மல் உள்ள​தால், வாகன ஓட்​டிகள் பல்​வேறு சிரமங்​களு​டன் சாலை​யில் பயணிக்க வேண்​டிய நிலை ஏற்பட்டுள்​ளது. பாதாள சாக்​கடை மற்​றும் சாலை சீரமைப்பு திட்​டங்​களை செயல்​படுத்த வேண்​டும்.

மேலும், அரசு மருத்​து​வ​மனை​யில் போதிய அடிப்​படை வசதி​கள் இல்​லாத​தால்,மருத்​து​வ​மனையை மேம்​படுத்த வேண்​டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே​போல், ரயில் போக்​கு​வரத்து வசதி​யிருந்​தும், மதுராந்தகம், கருங்​குழி, அச்​சிறுப்​பாக்​கம், தொழுப்​பேடு, படாளம் ஆகிய ரயில் நிலை​யங்​களில், தென் மாவட்ட விரைவு ரயில்​கள் நிறுத்தி இயக்​கப்​படு​வ​தில்​லை.

எனவே, விரைவு ரயில்​களை நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். செங்​கல்​பட்டு வரை​யில் இயக்​கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​களை, மேல்​மரு​வத்​தூர் வரை​யில் நீட்​டிக்க வேண்​டும் என கிராம மக்​கள் கோரிக்கை விடுத்துள்​ளனர்.

மேலும், இத்தொகுதியில் உள்ள கிராமங்​களில் விவ​சா​யம் அதி​கள​வில் நடை​பெறுகிறது. ஆனால், பாசனத்​துக்கு தண்​ணீர் கிடைக்​காமல் விவ​சா​யிகள் தவித்து வருகின்றனர்.

அதனால், ஏரி​கள் மற்​றும் பாசன கால்​வாய்​களை தூர்​வார வேண்​டும் என விவ​சா​யிகள் வலி​யுறுத்து​கின்​றனர். வேடந்தாங்​கல் பறவை​கள் சரணால​ய ​பகு​தி​யில், வனத்​ துறை,சுற்​றுலாத்​ துறை இணைந்து சுற்​றுலாவை மேம்படுத்​தும் வகை​யில், பல்​வேறு திட்​டங்​களை செயல்படுத்தி உள்ளூர் மக்​களுக்​கு வேலை வாய்ப்பு உரு​வாக்க வேண்​டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

தொகு​தி​யில் அதிகளவில் உள்ள ஆதி​தி​ரா​விடர் மற்​றும் வன்​னியர் சமுதாயத்தினர் தேர்​தலில் வெற்​றி, தோல்​வியை நிர்​ண​யிப்​பவர்​களாக உள்​ளனர். இவர்​களுக்கு அடுத்​த​படி​யாக தெலுங்கு மொழி பேசும் மக்​கள் மற்​றும் பிற இனத்​தவர்​கள் கணிச​மாக உள்​ளனர்.

இந்த தேர்​தலில் அதி​முக சார்​பில் ஏற்​க​னவே தொகு​தி​யின் எம்​எல்​ஏ​வாக உள்ள மரகதம் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். திமுக​வில் அமுலு பொன்​மலர், நாம்​ தமிழர் கட்சி சார்​பில் ஜானகி​ராமன், தமிழக வெற்​றிக் ​கழகம் சார்​பில் எழில் கேத்​ரின் ஆகியோர் போட்​டி​யிடு​கின்​றனர்.

இதில், அதி​முக வேட்​பாளர் ஏற்​ெக​னவே தொகு​தி​யின் எம்​எல்​ஏ​வாக இருப்​பது பெரிய பலமாக கருதப்​படு​கிறது. அதே​போல், திமுக சார்​பில் புது​முக​மாக களமிறங்​கி​யுள்ள அமுலுபொன்​மலர் தொகு​தியை சேர்ந்​தவர் என்​பதோடு, அனை​வருக்​கும் பரிட்​சைய​மானவர் என்​பதும் பலம் சேர்க்​கிறது. அதனால், இம்​முறை வெற்றி என்​பது மிக​வும் இழுபறி​யாகவே இருக்​கும் என கருதப்​படு​கிறது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,01,308

பெண் - 1,03,975

மூன்​றாம் பாலினத்​தவர் - 61

மொத்த வாக்​காளர்கள் - 2,05,344

மதுராந்தகம் தொகுதியில் மகுடம் யாருக்கு?
தி.நகர் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் கட்சிகள் - முந்துவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in