அக்.2-ம் தேதி கிராம சபை கூட்டம்: தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி கி​ராம சபைக் கூட்​டங்கள் நடை​பெற உள்ளது. இந்த கூட்டங்களில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​களை 2 நாட்​களில் இணை​யதளத்​தில் பதிவேற்ற வேண்​டும் என்று ஊரக வளர்ச்​சித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும், ஊரக வளர்ச்​சித் துறை ஆணை​யர் வே.அ​முதவல்லி அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழகத்​தில் அனைத்து கிராம ஊராட்​சிகளி​லும் தேசத் தந்தை மகாத்மா காந்தி ஜெயந்தி நாளான அக்​.2-ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்​டம் நடத்த வேண்​டும். சபை கூடும் இடம், நேரம் ஆகிய​வற்றை கிராம மக்​களுக்கு முன்​கூட்​டியே தெரியப்​படுத்த வேண்​டும். ஊராட்சி நிர்​வாகம், நிதி செல​வினம், குடிநீர் விநி​யோகம், 100 நாள் வேலை​வாய்ப்பு திட்​டம், குளங்​கள், ஏரி​கள் சீரமைப்​பு, ஜல் ஜீவன் திட்​டம் உட்பட விவ​காரங்​களை கூட்​டத்​தில் விவா​திக்க வேண்​டும்.

இந்த கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட தீர்​மானங்​களை கிராம செயலர், 2 நாட்​களில் இணை​யதளத்​தில் பதிவேற்ற வேண்​டும். அதனுடன், கிராம சபைக் கூட்ட விவரங்​களை பொது​மக்​கள் அறிந்து கொள்​ளும் வகை​யில், ‘குடிமக்​கள் பங்​கேற்​பு’ என்ற புதிய செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. அந்த செயலியைப் பதி​விறக்​கம் செய்து பொது​மக்​கள் பயன்​பெற விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுஉள்​ளது.

சுதந்​திர தின​மா? - இதற்​கிடையே, கிராம சபைக் கூட்​டம் குறித்து ஆட்​சி​யர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில், அக்​.2-ம் தேதி காந்தி ஜெயந்தி என்று குறிப்​பிடு​வதற்​குப் பதில், சுதந்​திர தினம் என தவறு​தலாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது சமூக வலை​தளங்​களில்​ பேசுபொருளாகி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
காவிரி நீர் திறப்பு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in