ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசிய விவகாரம்: கைதான 3 பேரை காவலில் எடுக்க அனுமதி கோரி போலீஸார் மனு

சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசிய விவகாரம்: கைதான 3 பேரை காவலில் எடுக்க அனுமதி கோரி போலீஸார் மனு
Updated on
1 min read

சென்னை: ஆட்​சிக் கவிழ்ப்பு தொடர்​பாக தவெக எம்​எல்​ஏ​விடம் பேரம் பேசிய விவ​காரத்​தில் கைதான 3 பேரை 5 நாட்​களுக்கு காவலில் எடுத்து விசா​ரிக்க அனு​மதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் போலீ​ஸார் மனு தாக்​கல் செய்​துள்​ளனர். சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் இதற்கு பதில் அளிக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் பேர​வைத் தலை​வருக்கு எதி​ராக நம்​பிக்கை இல்லா தீர்​மானம் கொண்டு வரும்​போது, ஆளுங்​கட்​சிக்கு எதி​ராக வாக்​களித்​தால் ரூ.35 கோடி வரை லஞ்​சம் தரு​வ​தாக திமுக​வினர் தன்​னிடம் பேரம் பேசி​ய​தாக ஊத்​தங்​கரை தவெக எம்எல்ஏ இளை​ய​ராஜா, சென்னை மாநகரகாவல் ஆணை​யரிடம் புகார் கொடுத்​தார்.

அதன்​பேரில் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, சென்னை அரும்​பாக்​கத்​தை சேர்ந்த யூ-டியூபர் திரு​நாவுக்​கரசு, மேட​வாக்​கம் தியாக​ராஜன், திருச்சி நரேஷ் உள்​ளிட்ட 8 பேரை கைது செய்துள்​ளனர். இந்த வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மாரை​யும் போலீ​ஸார் தேடி வரும் நிலை​யில், அவர் முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் கைதாகி​யுள்ள நரேஷ், ரமேஷ், கார்த்​திக் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனு​மதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.மனுவை விசா​ரித்த முதன்மை அமர்வு நீதிபதி எஸ்​.​ கார்த்​தி​கேயன், போலீ​ஸாரின் மனுவுக்கு சம்​பந்​தப்​பட்ட 3 பேர் தரப்​பிலும் பதில் அளிக்க உத்​தர​விட்​டு, விசா​ரணையை ஜூலை 7-க்கு தள்​ளி​வைத்​தார். 3 பேரை​யும் அன்று நேரில் ஆஜர்​படுத்​து​மாறும் போலீ​ஸாருக்கு நீதிபதி உத்​தர​விட்​டார்.

ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசிய விவகாரம்: கைதான 3 பேரை காவலில் எடுக்க அனுமதி கோரி போலீஸார் மனு
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: சினிமா, ஓடிடி பைரசிக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in