

பழநி: தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசு ஆய்வு செய்து வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினைகளைச் சரிசெய்ய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் மீது அரசுக்கு எந்த வெறுப்பும் இல்லை.
தமிழகம் முழுவதும் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யப்படும். பக்தர்கள் புனித நீராடும் பழநி சண்முகநதியை ரூ.1.75 கோடியில் சீரமைக்கப்படும்.
தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறப்பது தொடர்பாக சாதக, பாதகங்கள் குறித்து அறிக்கையாகத் தயாரித்து முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. கள்ளுக்கடைகளைத் திறப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.