குவாரி உரிமம் பெறுவதை எளிதாக்க அரசு திட்டம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ‘கு​வாரி குத்​தகை உரிமம் எளிதாகப்பெற​ நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று அமைச்​சர் டி.கே.பிரபு தெரி​வித்​தார்.

கல்​கு​வாரி, கிரஷர், செங்​கல் உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கப் பிர​தி​நி​தி​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் அமைச்​சர் பேசி​ய​து: நிலு​வை​யில் உள்ள குவாரி குத்​தகை விண்​ணப்​பங்​கள் மற்​றும் புதிய குவாரி​களுக்​கான அனு​மதி தொடர்​பாக மாவட்ட அதிகாரி​கள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. அங்​கீகரிக்​கப்​பட்டசுரங்​கத் திட்​டத்​தில் நிர்​ண​யிக்​கப்​பட்ட கனிம இலக்கை முழு​மை​யாக எட்​டி, அதற்​கான உரிமத் தொகையை அரசுக் கணக்​கில் செலுத்த வேண்​டும்.

அரசுக்கு அதிக வரு​வாய் ஈட்​டித் தரும் குவாரி உரிமை​யாளர்​களுக்கு விருது தரப்​படும். செங்​கல் சூளை​களுக்​குத் தேவை​யான மண் எடுப்​ப​தற்​கான விதி​முறை​கள் மறுஆய்வு செய்​யப்​படும். கனிம வாக​னங்​களி​ல் ஜிபிஎஸ் கருவி பொருத்​த வேண்​டும்.ஜல்​லி, எம்​-​சாண்ட், செங்​கல் உள்​ளிட்ட கட்​டு​மானப் பொருட்​களை உற்​பத்தி செய்து உகந்த விலை​யில் கிடைக்​கச் செய்ய வேண்​டும்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“அமெரிக்காவுக்கு ஒருபோதும் பணியமாட்டோம்” - ட்ரம்புக்கு ஈரான் அதிபர் பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in