மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிதியுதவி உயர்வு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Perks for Physically Challenged in Puduchery

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை, அரிசி தொகை, பண்டிகை இலவச துணி தொகை, பெட்ரோல் ஆகியவற்றை உயர்த்தி மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளர்கள் தின விழா ஆண்டுதோறும் டிசம்பர் 3ல் நடக்கும். நடப்பாண்டு தொடர் மழையால் இந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "மாற்றுத் திறனாளிகள் என சொல்லும்போது எத்தனை சதவீதம் இருந்தால் உதவிகள் கிடைக்கும் என்ற நிலையில் 40 சதவீதம் இருந்தாலே போதும் என்று உறுதி செய்துள்ளோம். மாற்றுத்திறனாளிகள் வண்டிக்கான பெட்ரோல் 25 லிட்டரில் இருந்து 5 லிட்டர் உயர்த்தி 30 லிட்டராக தரப்படும்.

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த செலவுகளை சமாளிக்க மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துகிறோம். ரூ.3,000 உதவித்தொகை வாங்குவோருக்கு ரூ.3,500 ஆகவும் ரூ.4,800 வாங்குவோருக்கு ரூ.5,500 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது 15 கிலோ அரிசிக்கு பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் அரசு செலுத்துகிறது. அது 20 கிலோ அரிசிக்கான பணமாக தரப்படும்.

தற்போது 15 கிலோ அரிசிக்கு கிலோவுக்கு ரூ.30 தருவதை ரூ.40 ஆக உயர்த்தி மாதம் ரூ.800 அரிசி பணம் தரப்படும். இலவச துணிக்கு பண்டிகை காலத்தில் ரூ.500 தருவதை ரூ.750 ஆக உயர்த்தி தரப்படும். உயர்த்தப்பட்ட தொகை விரைவில் தரப்படும் என்றார்.

புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆளுநர்- முதல்வர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதம்: முன்னதாக விழாவில் மாற்றுத்திறனாளி சங்கங்கள் நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டனர். வேலாயுதம் என்பவர் பேசும்போது, "நீண்ட காலம் முதல்வராக ரங்கசாமி இருக்கிறார். நமது கருத்துகள் கேட்பார்.

அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதும் செய்யவில்லை. பல நலத்திட்டங்களை பலருக்கு செய்தாலும் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யவில்லை. நம் பிரச்சினைகள் குறித்து அரசு கவலைப்படவில்லை." என்றார்.

அப்போது கீழே இருந்த மாற்றுத்திறனாளிகள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலாயுதம் தனது கருத்தை சொல்வதாக கூறினார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோதல் ஏற்பட்டதையடுத்து போலீஸார் சமானதப்படுத்தினர். தொடர்ந்து வேலாயுதம் பேசினார்.

Perks for Physically Challenged in Puduchery
சிறந்த நடிகர் விருது: பாலாவின் கடிதமும், சசிகுமாரின் பதிலும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in