சென்னையில் மார்ச் 5 முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்ட கோரிக் கைகளுக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகால மாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்தக் கட்டமாக வரும் 5ம் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக. அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், அகிலன், சுந்தரேசன் ஆகியோர் கூறுகையில், வரும் 5ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்பது என கூட்டமைப்பின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது என்றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் தொடரும் தாமதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in