சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கியது அரசு மருத்துவர்கள் 48 மணி நேர உண்ணாவிரதம்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய அரசு மருத்துவர்கள்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய அரசு மருத்துவர்கள்.

Updated on
1 min read

சென்னை: கோரிக்​கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்​ணா​விரதப் போராட்​டத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் அரசு மருத்துவர்கள் தொடங்​கி​யுள்​ளனர்.

மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்​து​வர்​களுக்​கான திருத்​தப்​பட்ட ஊதி​யம் வழங்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்​கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்​டும்.

20 ஆண்​டு​கள் கடந்த மூத்த முது​நிலை மருத்​து​வர்​களுக்கு ஊக்​கத்​தொகை வழங்க வேண்​டும். நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப புதிய மருத்​து​வப் பணி​யிடங்​களை உரு​வாக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி பல ஆண்​டு​களாக அரசு மருத்​து​வர்​கள் போராடி வரு​கின்​றனர்.

இதற்​காக, பல்​வேறு அரசு மருத்துவர்கள் சங்​கங்​கள் ஒருங்​கிணைந்​து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பை (FOGDA) உரு​வாக்கி சுகா​தா​ரத் துறை செயலர், அமைச்​சருடன் பல கட்ட பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தி​யும் தீர்வு எட்​டப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, கூட்​டமைப்பு சார்​பில் கடந்த 12-ம் தேதி​முதல் தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்​கைகள் அடங்​கிய அட்​டையை அணிந்து பணி​யாற்றி வரு​கின்​றனர்.

அடுத்த கட்​ட​மாக 48 மணி நேர தொடர் உண்​ணா​விரதப் போராட்​டத்தை அரசு மருத்துவர்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் நேற்று தொடங்​கி​யுள்​ளனர்.

இது தொடர்​பாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் பால​கிருஷ்ணன், ராமலிங்​கம், அகிலன், சுந்​தரேசன் ஆகியோர் கூறுகை​யில், “கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்​ணா​விரதப் போராட்​டத்தை சென்​னை​யில் மேற்​கொண்​டனர்.

அப்​போது, எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த தற்​போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேரில் வந்து அரசு மருத்​து​வர்​களின் போராட்​டத்​துக்கு ஆதரவு அளித்​து, `தி​முக அரசு அமைந்​தவுடன் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​படும்' என்று உறு​தி​யளித்​தார்.

ஆட்சி அமைந்​தவுடன், `மக்​களை நீங்​கள் பார்த்​துக் கொள்​ளுங்​கள். உங்​களை நாங்​கள் பார்த்​துக் கொள்​கிறோம்' என்று சொன்​னார். கரோனா பெருந்​தொற்று காலத்​தில் தமிழக மக்​களை தனி​யார் மருத்​து​வ​மனை​கள் கைவிட்ட நிலை​யில், ஆயிரக்​கணக்​கான மக்​களின் உயிரை அரசு மருத்துவர்கள் காப்​பாற்​றினர். இது​வரை அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற​வில்​லை. அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்​ற வேண்​டும்​'' என்​று தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய அரசு மருத்துவர்கள்.</p></div>
ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திருட முயன்ற வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in